Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த திசைகளில் சமையல் அறையை அமைக்கக்கூடாது ஏன் தெரியுமா...?

Webdunia
எந்த ஒரு வீட்டு பெண்மணியும், குடும்பத்தினருக்காக உணவு சமைத்துக் கொண்டு சமையல் அறையில் அதிகப்படியான நேரம் பொழுதை கழிப்பதுண்டு. எனவே, உணவு சமைத்துக் கொண்டு சமையல் அறையில் இருக்கும் பொழுது, தமக்குச் சாதகமான திசை நோக்கி இருக்குமாறு அமைப்பது நல்லது.
 

வீட்டில் அக்னி மூலையான தென் கிழக்கு மூலையில் தான் வைக்க வேண்டும். மாறாக வட கிழக்கு பகுதியில் அமைத்தால் செல்வத்தை எரிப்பதற்கு சமம் ஆகும். இப்படி இல்லையென்றால் வறுமை அதிகமாகும். 
 
வீட்டில் சமையல் செய்பவர்கள் கிழக்கே பார்த்தவாறு நிற்கும் படி இருக்க வேண்டும். சமையலறையில் சமைக்கும் போது கிழக்கு திசையை நோக்கியவாறு  சமைப்பது நல்லது.
 
கிழக்கு திசையில் சமையலறை அமைவதால் வம்ச விருத்தி, குடும்ப தலைவி உடல் நலம் பாதிக்கப்படும். தென் கிழக்கு திசையில் அமைந்தால் உணவின் சுவை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் எந்த தடையும் இல்லாமல் இனிதே நடக்கும். 
 
தெற்கு பகுதியில் அமைந்தால் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். கடன் தொல்லை அதிகமாகும். தென் மேற்கில் சமையலறை அமைந்தால் தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். 
 
மேற்கு மற்றும் வடமேற்கில் சமையலறை அமைந்தால் நிம்மதியின்மை, சண்டைகள், வீண் செலவுகள் ஏற்படும். வடக்கில் சமையலறை அமைந்தால் குடும்பத்தில் உள்ள நபர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரலாம். 
 
நாம் மேலே சொன்னவாறு தான் வடகிழக்கில் சமையலறை அமைந்தால் தீய பலன்கள் தான் நடக்கும். சாப்பிடும் போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி  சாப்பிட்டால் உடல் நலம் சீராக இருக்கும். நோய்கள் வராது.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments