Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஸ்து சாஸ்திரத்தின் படி மூங்கில் செடியை எவ்வாறு வைத்து வளர்ப்பது...?

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (19:08 IST)
வாஸ்து படி, மூங்கில் செடி  வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என கருதப்படுகிறது. ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான திசையில் இல்லாவிட்டால், நிதி நிலை பாதிக்கப்படும்.


வாஸ்து சாஸ்திரத்தின் படி, மூங்கில் செடியை வைக்கும் போது, அதை ஜன்னல் அருகே அல்லது சூரிய ஒளி வரும் திசையில், அல்லது இடங்களில் வைக்க வேண்டாம். ஏனெனில் இந்த செடி சூரிய ஒளியில் கருகி விடும்.

மூங்கில் செடியை நடுவதற்கு ஏற்ற திசை கிழக்கு. இந்த திசையில் மூங்கில் செடியை நடுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுகிறது. இதனுடன் வீட்டில் உள்ளவர்களின் நிதி நிலையும் சிறப்பாக இருக்கும்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, 2-3 அடி உயரம் வரை வளரும் மூங்கில் செடிகள் மங்களகரமானவை. அலுவலகத்தில் மூங்கில் செடியை நடுவதால் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கும். மேலும் எதிர்மறை சக்தியும் அகற்றப்படும்.  மேலும் நிதி நிலை வலுப்பெறும்.

மூங்கில் செடியை நடுவதால் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், மூங்கில் செடியை படுக்கையறையிலும் வைக்கலாம். இது திருமண வாழ்வில் இனிமை கொண்டு தரும்.

மூங்கில் செடியை ஒரு கண்ணாடி பாத்திரம் அல்லது கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி சிவப்பு நாடாவால் கட்டி வைக்க வேண்டும். தொழிலில் வெற்றி பெற, படிக்கும் அறையில் 4 மூங்கில் செடிகளை வைக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்