Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்றில் குழந்தை அசைவதை ஆண்களும் உணரலாம் - வீடியோ

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2014 (16:31 IST)
'காது கொடுத்துக் கேட்டேன், ஆஹா குவாகுவா சத்தம்', எனக் காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தோன்றும் ஒரு பாடல் காட்சி உண்டு. இனி ஆண்கள், காது கொடுத்து மட்டும் கேட்க வேண்டியதில்லை. குழந்தை அசைவதை நேராகவே உணரலாம்.
 
கருவுற்று, வயிற்றுக்குள் சிசு மெல்ல மெல்ல வளர்வதும் அதை உணர்வதும் இதுநாள் வரை பெண்களுக்கே மட்டுமே உரித்தான அனுபவமாக இருந்தது. ஆனால், இப்போது ஆண்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹக்கீஸ் (Huggies) நிறுவனம் இதற்கெனப் புதிய பட்டையைத் தயாரித்துள்ளது. இதை ஒரே நேரத்தில் கருவுற்ற பெண்ணும் அவர் கணவரும் அணிந்துகொள்ள வேண்டும். அப்போது, பெண்ணின் வயிற்றில் குழந்தை அசைந்தாலோ, வயிற்றை எட்டி உதைத்தாலோ, அதை ஆணும் உணர முடியும். இது, அப்பாவாகக் காத்திருக்கும் காலத்தில், குழந்தையை நெருக்கமாக உணர்வதற்கு ஆண்களுக்கு உதவும். 
 
இந்தப் பட்டையை அணிந்துகொண்டு வருங்கால அப்பாக்கள் எப்படியெல்லாம் அனுபவிக்கிறார்கள் என்று பாருங்கள்.
 

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

Show comments