Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு சமையல் பளுவை குறைக்க உதவும் சில டிப்ஸ்....!!

Webdunia
காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பு கழுவுவது சிறந்தது. கத்தரிக்காயை சமைக்கும் நேரத்தில் நறுக்கி கொள்வதால் கருக்காமல் இருக்கும்.

* வெங்காயத்தை நான்கு பாகமாக நறுக்கி தண்ணீரில் போட்டுவைத்த பிறகு நறுக்கினால் கண்கள் எரிச்சல் ஏற்படாது.

* மீன் பொறிக்கும் போது வரும் வாசனை அருகில் உள்ள வீடுகளில் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, அந்த வாசனை வெளியே செல்லாமல் இருக்க நாம்  மீன் பொறிக்கும் போது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவத்தியை ஏற்றி வைத்துவிட்டு மீன்களை பொறித்தால் வாசனை நம் வீட்டை தாண்டாது.
 
* வாழைத்தண்டை நறுக்கி மோரில் போட்டு வைத்தால் கருக்காமல் இருக்கும்.
 
* பூண்டை தட்டிப்போட்டு சமைப்பதை விட தோல் உரித்து காற்றாட விட்டு சமைப்பதே சிறந்தது .
 
* முட்டையைப் பயன்படுத்தி எந்த உணவு செய்தாலும் அதில் சிறிது மஞ்சள் தூள் சிறிது மிளகு தூள் சேர்த்துக்கொள்வது நல்லது .
 
* தோசை வராமல் போனால் உடனடியாக தோசைக் கல்லின் மீது உப்புத்தூளைக் கொட்டி முழுமையாக தடவி பின்னர் உப்பை தள்ளிவிட்டு தோசை மாவை ஊற்றினால் தோசை அழகாக வரும்.
 
* கெட்டுப்போன உணவு என்று தெரிந்தால் அதை உணவு கிடைக்காதவருக்குகூட கொடுக்க வேண்டாம் அதை நீங்களும் சாப்பிட வேண்டாம். உணவுகளை அதிகநாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டாம்.
 
* உணவு அதிகமாக இருந்தால் அது நன்றாக இருக்கும்போதே அருகில் இருக்கக்கூடியவர்களுக்கு கொடுத்துவிடலாம், கெட்டுபோனால் யாருக்கும் பயனில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

டிஷ்வாஷர்: இந்திய சமையல் பாத்திரங்களுக்கு ஏற்ற நவீன தீர்வு!

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்: லான்செட் ஆய்வறிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments