குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகளை பார்ப்போம்....!

Webdunia
பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த  நீரில் கழுவவும்.
* இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட  வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.
 
* தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
 
* வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு  கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.
 
* வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.
* சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.
 
* மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து  ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன? தடுப்பு முறைகள் குறித்த விளக்கம்..!

தினம் ஒரு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பயனுள்ள தகவல்..!

நீரிழிவு அதிகரிப்புக்குக் காரணம் என்ன? வெள்ளை உணவுகள் பற்றி ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments