Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப தலைவிகளுக்கான வீட்டு உபயோக குறிப்புகள்....

குடும்ப தலைவிகளுக்கான வீட்டு உபயோக குறிப்புகள்....

Webdunia
மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும். மாவு பிசையும்போது சிறிதளவு பால் சேர்த்தும், ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து பிசைந்தால் எண்ணெய் குடிக்காது. மேலும் நன்கு உப்பி வரும்.


 


* வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்தால், எலி நடமாடும் இடங்களில் கருப்பு மிளகை அல்லது புகையிலை போட்டு வைத்தால் எலித்தொல்லை குறையும்.
 
* எறும்புகள் நடமாடும் இடங்களில் வெள்ளரித் தோலை வைத்தால் எறும்புத் தொல்லை குறையும்.
 
* சட்டையில் ஒட்டியுள்ள பபிள்கம்மை நீக்க,அந்த சட்டையை குளிர்சாதன பெட்டியின் பிரீசரில் வைத்துவிட்டு,கொஞ்சம் நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் போதும்.
 
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. இதற்கு தாளிக்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.
 
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும். கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள். சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் சல்பரினால் ஆனது.
 
* ஒரு பாத்திரத்தில் தன்ணீர் விட்டு, அதில் பச்சை கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.
 
* சட்டையில் உள்ள இன்க் கரை போக வேண்டுமென்றால், கரை உள்ள இடத்தில் டூத் பேஸ்டை தேய்த்து, அதை காயவிட்டு, பின்னர் துவைத்தால் போதும்.
 
* எலுமிச்சையிலிருந்து அதிக சாறு எடுக்க வேண்டுமென்றால், பிழியும் முன்னர் ஒரு மணி நேரத்திற்கு வெந்நீரில் எலுமிச்சையை ஊற வைத்தால் போதும்.
 
* உருளைக்கிழங்கு தோலை எளிதாக உரிக்க, வேக வைத்து எடுத்ததும் உடனே குளிர்ந்து நீரில் போட்டு வைத்தால் எளிதாக உரிக்கலாம்.
 
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. இதனால் சத்துக்கள் வீணாவதை தவிர்க்கலாம்.
 
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. மிதமான சூட்டில் பிழியலாம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments