Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வீ‌ட்டு உபயோக‌க் கு‌றி‌ப்புக‌ள்

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2011 (18:18 IST)
பச்சை மிளகாயை ஃப்ர ீ சருக்குள ் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம்.

ஒரு கோப்பை வினிகருடன் மூன்று கோப்பை தண்ணீரை கலந்து ஜன்னல்களை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.

துணிகளில் பட்ட எண்ணெய ்‌க ் கரையை நீக்க, முகத்திற்கு தடவும் பவுடரை கரை மேல் போடுங்கள். சிறிது நேரம் விட்டு எப்பொழுதும் போல் துணியை கழுவுங்கள். கரை காணாமல் போகும்.

கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.

கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.

கேஸ் ஸ்டவ்வை எளிதாக சுத்தம் செய்ய சிறிது சோடாவை அதன் மீது ஊற்றி சில நிமிடங்கள் விட்டு, அதன்பிறகு சுத்தம் செய்யவும்.

வெங்காயத்தை வெட்டியபிறகு உடனடியாக பயன்படுத்தி விடவும். வெங்காயம் கிருமிகளை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது. அரை மணி நேரத்திற்கு மேல் அதை வெளியில் வைக்க வேண்டாம்.

சமைக்கும் போது கீரை மற்றும் பச்சை காய்கறிகளின் நிறம் மாறாமல் இருக்க 2 சொட்டு எலுமிச்சை சாற்றை அதில் சேர்க்கவும்.

வெங்காயத்தை உறிக்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க, உறிப்பதற்கு முன் 5 நிமிடங்களுக்கு வெங்காயத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். கண்ணீர் மிச்சமாகும்.

வெங்காயத்தை உறிக்கும்போது கண்கள் எரியாமல் இருக்க ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அதன்பிறகு உறிக்கவும். கண்கள் எரியாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊற வைத்த பாதாம், உலர் பாதாம்.. என்ன வேறுபாடு?

பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மருத்துவர்களின் பதில் என்ன?

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Show comments