Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேஸ்ட்டாகாமல் டேஸ்ட்டானதாக்க

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2011 (18:38 IST)
வேஸ்ட்டாகி விடுமோ என்று கஷ்டப்படுகிறீர்களா? அதை டேஸ்ட்டானதாக்கி பாஸ்ட்டாக சாப்பிட வைக்க கீழே சில குறிப்புகள் அளித்துள்ளோம்.

உப்புமா நிறைய செய்து சாப்பிடாமல் நிறைய உள்ளதா? அதில் உள்ள மிளகாய், கறிவேப்பிலையை நீக்கி விட்டு நன்றாக கையால் ஒரு சேர பிசைந்து அதில் சம அளவு கோதுமை மாவு, கொஞ்சம் கரம் மசாலா, மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்துப் பிசைந்து சிறு சிறு பூரிகளாகச் பொரித்து எடுங்கள். சுவை அள்ளிக் கொண்டு போகும்.

வெண் பொங்கல் சில சமயங்களில் மீந்து விடும். கவலையே படாதீர்கள். கடுகு, உள ு‌ந ்தப்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை அதன் தலைமேல் போட்டு, சிறிதளவு புளிக்கரைசலையும் சேர்த்துக் கொதித்ததும் அதில் மீந்த பொங்கலை சேர்த்துக் கிளறி இறக்கினால் அருமையான சாம்பார் சாதம் தயார்.

சப்பாத்தி சில சமயங்களில் ஹார்டாக செய்து விட்டால் மீந்து விடும். அதனை தோசைக்கல்லில் போட்டு முறுக்கு மாதிரி மொறுமொறுப்பாக சுட்டெடுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவைப்போல ஒ‌ன்றர ை மடங்கு சர்க்கரையை பாகு போல காய்ச்சி கம்பிப்பதம் வந்ததும் அதில் பொடித்த சப்பாத்தி, நெய், முந்திரி, ஏ ல‌க்கா‌ய ்த்தூள் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். ஆறியதும் துண்டுகள் போட்ட ு‌க் கொடுங்கள். பிளேட்டில் இருந்த ஸ்வீட் எங்கே என்று கேட்பீர்கள்?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊற வைத்த பாதாம், உலர் பாதாம்.. என்ன வேறுபாடு?

பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மருத்துவர்களின் பதில் என்ன?

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Show comments