Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டின் உட்புற அழகிற்கு....

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2012 (15:19 IST)
ஒரு வீடு சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், அதற்கு கூடுதல் அழகு சேர்ப்பது அதன் உட்புற அலங்கார அமைப்புதான்.வீட்டின் உட்புறத்தை அழகுபடுத்த பெருமளவு பணம் செலவிட முடியாதவர்கள், மிக எளிமையான வழியில் வீட்டை பிறர் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அழகுபடுத்தலாம்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் சிறு சிறு தொட்டிகளில் அழகான செடிகளை வாங்க ி, வீட்டில் ஆங்காங்கே வைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் வீட்டின் அழகு பன்மடங்கு அதிகரிக்கும். வீட்டிற்கு வருகை தரும் விருந்தினர்கள் கண்டிப்பாக ஏதோ ஒரு புதிய மாற்றத்தை உணர்வதாக கூறுவார்கள்.

இதற்காக நீங்கள் பெரிய முயற்சிகள் எடுக்க தேவையில்லை என்றாலும் சில விஷயங்களில் கவனம் தேவை. நீங்கள் வைத்திருக்கும் செடிகளுக்கு சரியான அளவில் சூரிய வெளிச்சம் மற்றும் தண்ணீர் கிடைகிறதா என உறுதிசெய்வது அவசியம்.

சூரிய கதிர்கள் நேரடியாக செடிகளின் மீது படாமல் இருப்பதால், மிதமான அளவில் தண்ணீரை செடிகளின் மீது தெளித்தால் அதுவே போதுமானது. பூச்செடிகளை விட க்ரோடன்ஸ் , சப்பாத்தி கள்ளி, கற்றாழை ஆகிய வகைகளை தேர்வு செய்து, விதவிதமான பூத்தொட்டிகளில் வைத்து அழகு சேர்க்கலாம்.

வீட்டின் உட்புறத்தை அதிகம் செலவழிக்காமல் பொலிவு படுத்தும் இந்த எளிய முறையை நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

Show comments