Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்க...

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2011 (18:05 IST)
அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்க நுரையுடன் (சோப ்பு நுரை) கூடிய கிளீனிங் பவுடரால் தேய்த்த பிறகு பாத்திரங்களை வெயிலில் காய வைத்தால் நாற்றம் நீங்கிவிடும்.

கத்தரிக்காய் வாடாமல் இருக்க...

கத்தரிக்காயை ஹாட்பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல் நன்றாகவும் நிறம் மாறாமலும் இருக்கும்.

சாதம் வெண்மையாக இருக்க...

மழை நீரில் அரிசியை வேகவைத்தால் சாதம் வெண்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்

வாழைக்காய் கெடாமல் இருக்க...

வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

ஊறுகாய் கெடாமல் இருக்க...

ஊறுகாய் கெடாமல் இருக்க சிறிது எண்ணெயை சூடாக்கி ஊறுகாய் மேல் ஊற்ற வேண்டும். பிறகு பாருங்கள் ஊறுகாய் கெடாமல் நீண்ட நாள் வரும்.

பாகற்காயின் கசப்பை போக்க...

பாகற்காயில் இருக்கும் கசப்பை போக்க வேண்டுமானால் காயுடன் உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிகட்டிய பிறகு பொரியல் செய்தால் கசப்பு நீங்கிவிடும்.

பருப்பு சீக்கிரம் வேக...

பருப்புடன் சிறிது எண்ணெய்யும் சிறிது பெருங்காயத் தூளையும் சேர்த்து வேகவிட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

ரசம் சுவையாக இருக்க...

வீட்டில் ரசம் வைத்த பிறகு அதில் அரை ஸ்பூன் சர்க்கரை கலந்தால் ரசம் சுவையாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊற வைத்த பாதாம், உலர் பாதாம்.. என்ன வேறுபாடு?

பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மருத்துவர்களின் பதில் என்ன?

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Show comments