Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இட்லி மாவு புளிக்காமல் இருக்க

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2011 (18:32 IST)
சிக்கன் 65 சமைக்கும் போது கோழ ி‌க் கறி மிருதுவாக இருக்க (1/2 கிலோவிற்கு ஒரு முட்டை என்ற விகிதத்தில்) முட்டையைச் சேர்க்கவும்.

இட்லி மாவு புளிக்காமல் இருக்க ஒரு சிறிய துண்டு வாழை இலையை அதில் வைக்கவும்.

ப ொ‌ர ியல் செய்யும்போது அடிக்கடி தண்ணீர் தெளித்தால் அது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும்.

வீட்டில் உள்ள எலக்ட்ரிக் ஸ்விட்ச்களில் அழுக்கு சேர்ந்து விட்டால் அதை எளிதில் அகற்ற முடியாது. நெயில் பாலிஷ் ரிமூவரை இதன் மேல் தடவி, சுத்தமான துணியால் துடைக்கவும். சுவிட்ச் அழுக்கில்லாமல் பளபளக்கும்.

பாத்திரத்தை மூடி வைத்து காய்கறிகளை சமைத்தால், சமையலும் சீக்கிரம் முடியும், அதில் உள்ள சத்தும் பாதுகாக்கப்படும்.

அலமாரிகளில் சூடத்தை வைத்து, பூச்சிகள் வராமல் துணிகளையும், புத்தகங்களையும் பாதுகாக்கலாம். இதை வாஷ் பேசின்களிலும் போட்டு வைக்கலாம்.

ஃபிரைட் ரைஸ் போன்ற அரிசி வகை உணவுகளை சமைக்கும் போது சில துளிகள் எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சாதம் ஒட்டாமல் மிருதுவாக இருக்கும்.

வறுத்த வேர்கடலையை பொடியாக்கி காய்கறிகள் சமைக்கும்போது அத்துடன் சேர்க்கலாம். இது சுவையை அதிகரிக்கும்.

சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து துணிகளை துவைத்தால் அதில் பட்ட கோந்து கரைகள் நீங்கும்.

சர்க்கரை வியாதியில் அவதிப்படுபவர்கள் தங்கள் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க வெந்தயப் பொடியை தினமும் சாப்பிடுவது நல்லது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மருத்துவர்களின் பதில் என்ன?

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

Show comments