Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌வில‌ங்குக‌ளி‌ல் ‌சில ‌வி‌சி‌த்‌திர‌ங்க‌ள்

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2010 (17:20 IST)
‌ வில‌ங்குக‌ள் ப‌ற்‌றி பல ‌விஷய‌ங்களை‌ப் படி‌த்‌திரு‌ப்போ‌ம், கே‌ள்‌வி‌ப்ப‌‌ட்டிரு‌ப்போ‌ம். இ‌ங்கே ‌வில‌ங்குக‌ள் ப‌ற்‌றிய ‌சில ‌வி‌சி‌த்‌திர‌ தகவ‌ல்களை பா‌ர்‌ப்போ‌ம்.

‌ சிறு‌த்தையா‌ல் ‌சி‌ங்க‌த்தை‌ப் போ‌ல் க‌ர்‌ஜி‌க்க முடியாது. பூனையை‌ப் போல ‌மியா‌வ் எ‌ன்ற ஓசையை‌த்தா‌ன் எழு‌ப்பு‌ம்.

ஓ‌ர் ஒ‌ட்டக‌த்தை ‌விடவு‌ம் அ‌திக நா‌ட்களு‌க்கு‌த் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி எ‌லியா‌ல் தா‌க்கு‌ப் ‌பிடி‌க்க முடியு‌ம்.

ஒ‌ட்டக‌ப் பறவை எ‌ன்று நெரு‌ப்பு‌க் கோ‌ழி அழை‌க்க‌ப்படு‌கிறது. இது ஒ‌ட்டக‌த்தை‌ப் போல பல நா‌ட்க‌ள் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்காமலேயே வாழ‌க் கூடியது எ‌ன்பதா‌‌ல் அத‌ற்கு இ‌ந்த பெய‌ர்.

ர‌ங்கொ‌த்‌தியா‌ல் ஒரு நொடி‌க்கு 20 முறை மர‌த்தை‌க் கொ‌த்‌தி‌த் த‌ள்ள முடியு‌ம்.

காக‌ம் ஒரு ம‌ணி‌க்கு 45 மை‌ல்க‌ள் வேக‌த்‌தி‌ல் பற‌க்கு‌ம்.

ஒரு சாதாரண பசு அத‌ன் வா‌ழ்நா‌ளி‌ல் 2 ல‌ட்ச‌ம் குவளை பா‌ல் கொடு‌க்கு‌ம்.

உல‌கிலேயே ‌மிக‌ச் ‌சி‌றிய பாலூ‌ட்டி, தா‌ய்லா‌ந்‌தி‌ல் காண‌ப்படு‌ம் ப‌ப்‌ளி‌யீ எ‌ன்ற வ‌வ்வா‌ல் இனமாகு‌ம்.

டா‌ல்‌பி‌ன்க‌ள் ஒரு க‌ண்ணை‌ ம‌ட்டு‌ம் மூடி‌க் கொ‌ண்டு தூ‌ங்கு‌ம்.

‌ நீல‌த் ‌தி‌மி‌ங்கல‌ம் எழு‌ப்பு‌ம் ஒரு ‌வித ‌வி‌சி‌ல் ஒ‌லி, ‌வில‌ங்குக‌ள் எ‌ழு‌ப்பு‌ம் ஒ‌லிக‌ளிலேயே ‌மிகவு‌ம் பலமானதாகு‌ம். அத‌ன் அளவு 188 டெ‌சிப‌ல்க‌ள்.

வே‌ட்டையாடுவது உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கியமான ப‌ணிகளை பெ‌ண் ‌சி‌ங்கமே செ‌ய்‌கிறது. ஆ‌ண் ‌சி‌ங்‌க‌ம் பெரு‌ம்பாலு‌ம் ஓ‌ய்வெடு‌ப்பது‌ம், குழ‌ந்தைகளை கவ‌னி‌ப்பது‌ போ‌ன்ற ப‌ணிகளை ம‌ட்டுமே செ‌ய்யு‌ம்.

ஜெ‌ல்‌லி ‌மீ‌னி‌ல் 95 சத‌வீத‌ம் த‌ண்‌ணீ‌ர்தா‌ன் உ‌ள்ளது.

பெ‌ன்கு‌யி‌ன்க‌‌ளி‌ல் ப‌ண் இன‌ம் மு‌ட்டை இடு‌ம் ப‌‌ணியை செ‌ய்‌கிறது. ஆ‌ண் இன‌ம்தா‌ன் அடை கா‌த்து கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் ப‌ணியை மே‌ற்கொ‌ள்‌கிறது.

ம‌னிதனு‌க்கு அடு‌த்தபடியாக ‌சி‌ந்‌தி‌க்கு‌ம் ‌திற‌ன் உ‌ள்ள ‌பிரா‌ணி ‌சி‌ம்ப‌ன்‌ஸி குர‌ங்குதா‌ன்.

‌ பிற‌ந்த யானை‌க் கு‌ட்டி 6 மாத‌ங்க‌ள் வரை வெறு‌ம் தா‌ய்‌ப்பாலை ம‌ட்டுமே குடி‌க்‌கிறது. யானை‌க்கு 4 ப‌ற்க‌ள் உ‌ள்ளன. இவை சுமா‌ர் நூறு தடவை ‌விழு‌ந்து முளை‌க்‌கி‌ன்றன. ‌‌
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments