Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மிக‌ச் பிரகாசமான நிலவை இன்று காணலா‌ம்

Webdunia
சனி, 30 ஜனவரி 2010 (11:40 IST)
பெள‌ர்ண‌மி எ‌ன்றாலே ‌மிக‌ப்பெ‌ரிய, ‌அ‌திக ‌பிரகாசமான ‌நிலவை வா‌னி‌ல் கா‌ண்ப‌தி‌ல் எ‌ந்த ‌விய‌ப்‌பு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் ம‌ற்ற எ‌ந்த பெளண‌ர்‌மி ‌தின‌த்தை‌க் கா‌ட்டிலு‌ம் இ‌ன்று ந‌ம் க‌ண்க‌ள் காணு‌ம் ‌நிலவு அள‌விலு‌ம், ‌பிரகாச‌த்‌திலு‌ம் பெ‌ரியதாக இரு‌க்கு‌ம்.

நடப்பு 2010-ம் வருடத்தில் தோன்றும் அனைத்து பெள‌ர்ண‌மி ‌தின‌த்தைய நிலவுகளையும் விட உருவத்தில் பெரிதான மற்றும் அதிக பிரகாசமான நிலா இன்று தோன்றுகிறது. இந்த நிலவானது இரவு சுமார் 8 மணிக்கு மேல் முழு அளவில் தெரியும்.

சுற்று வட்டப்பாதையில் நிலாவின் ஒரு பக்கம் மட்டும் பூமிக்கு சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டர் அருகில் தெரிவதால் இத்தகைய வியத்தகு நிகழ்வு நடைபெறுகிறது. இது நடப்பு ஆண்டில் மற்ற எல்லா பெளர்ணமி தினத்தன்று தோன்றும் நிலவுகளை விட உருவத்தில் சுமார் 15 சதவீத அளவு பெரிதாக தெரியும்.

அதே போன்று சுமார் 30 ‌விழு‌க்காடு அளவுக்கு அதிகமான வெளிச்சம் உடையதாகவும் காணப்படும். இந்த தகவலை அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான `ஸ்பேஸ்' அமைப்பின் இயக்குநர் சி.பி.தேவ்கன் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments