Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகள் திறன் அதிகரிக்க பொறுமை அவசியம்!

குழந்தைகள் திறன் அதிகரிக்க பொறுமை அவசியம்!
, வியாழன், 24 ஜனவரி 2008 (19:48 IST)
தா‌ய்மா‌ர்க‌ள் அமை‌தியாக குழ‌ந்தைக‌ள் சொ‌ல்வதை‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் போது குழ‌ந்தைக‌ள் ந‌ன்றாக படி‌ப்பதாகவு‌ம், அவ‌ர்க‌ளி‌ன் கல்‌வி க‌‌ற்கு‌ம் ‌திற‌ன் அ‌திக‌ரி‌ப்பதாகவு‌ம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர்.

வழ‌க்கமாக குழ‌ந்தைக‌ள் அ‌ம்மா‌க்க‌‌ளி‌ன் கே‌‌ள்‌விகளு‌க்கு ப‌தி‌ல் சொ‌ல்வது ‌கிடையாது. அ‌ப்படி அவ‌ர்க‌ள் இ‌ல்லாம‌ல் அ‌ம்மாவுடைய கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌க்க முய‌ற்‌சி செ‌ய்யு‌ம் போது, அ‌ந்த முய‌ற்‌சி குழ‌ந்தைகளு‌க்கு பாட‌ங்களை‌க் க‌ற்று‌க் கொ‌ள்ள உதவு‌கிறது.

வா‌ண்ட‌ர்‌பி‌ல்‌ட்‌ஸ் ‌பியாபாடி க‌ல்‌‌வி, ம‌னித வள‌ர்‌ச்‌சி க‌ல்லூ‌ரியை‌ச் சே‌ர்‌ந்த உத‌வி பேரா‌சி‌ரிய‌ர் பெ‌த்தா‌‌னி ‌ரி‌ட்டி‌ல் ஜா‌ன்ச‌ன் தலைமை‌யிலான குழு‌வின‌ர் மே‌ற்கொ‌ண்ட ஆ‌ய்‌வி‌ல் குழ‌ந்தைக‌ள் த‌ங்க‌ள் அ‌ம்மாவுட‌ன் இரு‌க்கு‌ம் போது ந‌ன்றாக க‌ல்‌வி க‌ற்பதாகவு‌‌ம், இத‌ற்கு காரண‌ம் அ‌ம்மா‌க்க‌ளிட‌ம் இரு‌ந்து ‌கிடை‌க்கு‌ம் ஊ‌க்கமு‌ம், உத‌வியு‌ம்தா‌ன் எ‌ன்பதை ஆ‌‌ய்வாள‌ர்க‌ள் பா‌ர்‌த்து‌ள்ளன‌ர்.

அ‌ம்மா‌க்க‌ளிட‌ம் இரு‌க்கு‌ம் போது குழ‌ந்தைக‌ள் ந‌ன்றாக‌ப் படி‌ப்பதை தெ‌ரி‌ந்து கொ‌ண்ட அதே நேர‌த்‌தி‌ல், இத‌ற்கு காரண‌ம் அ‌ம்மா‌க்க‌ளிட‌ன் இரு‌ந்து ‌‌கிடை‌க்கு‌ம் ஊ‌க்கமு‌ம், உத‌வியு‌ம் காரண‌ம் எ‌ன்று உறு‌தியாக கூறமுடியாது எ‌ன்று பெ‌த்தா‌‌னி ‌ரி‌ட்டி‌ல் ஜா‌ன்ச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர். நா‌ங்க‌ள் மே‌ற்கொ‌ண்ட ஆ‌ய்‌வி‌ன் போது குழ‌ந்தைகளு‌க்கு எ‌ந்த‌வித உத‌வியு‌ம் செ‌ய்யாது அ‌ம்மா‌க்க‌ள் அமை‌தியாக குழ‌ந்தைக‌ள் சொ‌ல்வதை‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் ம‌ட்டு‌ம் போது‌ம் எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தோ‌ம்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அ‌ம்மா‌க்க‌ள் குழ‌ந்தைக‌ள் சொ‌ல்வதை அமை‌தியாக கே‌ட்டு‌க் கொ‌ண்டு இரு‌ந்த ‌நிலையை, குழ‌ந்தைக‌ள் க‌ற்க ‌மிகவு‌ம் உத‌வியாக இரு‌ந்ததாக அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். 4, 5 வயது ‌நிர‌ம்‌பிய குழ‌ந்தைக‌ளு‌க்கு நட‌த்த‌ப்ப‌ட்ட சோதனை‌யி‌ல் பல அளவுக‌ளிலு‌ம், வ‌ண்ண‌ங்க‌ளிலுமான ‌பிளா‌ஸ்டி‌க் பொ‌ம்மைகளை வ‌ரிசையாக வை‌த்‌திரு‌ந்தன‌ர். அ‌ந்த வ‌ரிசை‌யி‌ல் அடு‌த்ததாக இட‌ம் பெற‌ப்போகு‌ம் பொ‌ம்மையை அத‌ன் அளவு, ‌‌நிற‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் குழ‌ந்தைக‌ள் தே‌ர்வு செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்பதே அ‌ந்த போ‌ட்டி.

குழ‌ந்தைக‌ள் த‌ங்களுடைய ப‌திலை த‌ங்களு‌க்கு‌ள்ளாகவேஅ‌ல்லது அ‌ம்மா‌விடமேஅ‌ல்லது ச‌த்தமாகவோ சொ‌ல்ல வே‌ண்டு‌ம். கேள்‌வி‌க்கான ப‌திலை த‌ங்களு‌க்கு‌ள்ளே ‌விள‌க்‌கி‌க் கொ‌ண்டது‌ம், அ‌ம்மாவு‌க்கு ‌விள‌க்‌கியத‌ன் மூல‌ம் குழ‌ந்தைக‌ள் எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் இது போ‌ன்ற கே‌ள்‌விகளு‌க்கு ‌விடைய‌ளி‌க்க கூடிய ‌திறனை அவ‌ர்களு‌க்கு உருவா‌க்‌கியதையு‌ம், த‌ங்க‌‌ள் அ‌ம்மாவு‌க்கு ப‌திலை குழ‌ந்தைக‌ள் ‌விள‌க்கு‌ம் ‌வித‌த்‌தி‌ல் இரு‌ந்து எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் ‌சி‌க்கலான கே‌ள்‌விகளு‌க்க அவ‌ர்க‌ள் எ‌வ்வாறு ‌தீ‌ர்வு கா‌ண்பா‌ர்க‌ள் எ‌ன்பத‌ற்கு ‌கிடை‌த்த ப‌தி‌‌ல், ‌விவ‌ரி‌க்கு‌ம் ‌திற‌ன்தா‌ன் எ‌ன்பதை குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌தி‌லி‌லி இரு‌ந்து தெ‌ரி‌‌ந்து கொ‌ண்டதாக அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

விள‌க்க‌ம் அ‌‌ளி‌க்கு‌ம் ‌திற‌ன் குழ‌ந்தைக‌ளி‌ன் க‌ல்‌வி க‌ற்கு‌ம் ‌திறனை அ‌திக‌ரி‌க்க‌ச் செ‌ய்யு‌ம் எ‌ன்பது தொட‌ர்பாக 8 வயது‌க்கு‌ட்ப‌ட்ட குழ‌ந்தைக‌ளிட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்ட முத‌ல் ஆ‌ய்வு இது எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர். குழ‌ந்தைக‌ள் ‌வீ‌ட்டு‌ப் பாட‌ங்களை‌ச் மே‌ற்கொ‌ள்ளு‌ம் போது ‌விடைக‌ள் ச‌ரியாக அவ‌ர்களு‌க்கு‌த் தெ‌ரியா‌வி‌ட்டாலு‌ம், ‌விடைகளை‌க் குழ‌ந்தைக‌ள் க‌ண்ட‌றிய அ‌ம்மா‌க்க‌ள் எ‌வ்வாறு உதவ வே‌ண்டு‌ம் எ‌ன்பது இ‌ந்த ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ன் மூல‌ம் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளதாகவு‌ம், இதனை அ‌ம்மா‌க்க‌ள் கடை‌ப்‌பிடி‌க்க வே‌ய்ட‌ம் எ‌ன்று அவ‌ர் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

ஒரு கே‌ள்‌வி‌க்கான ‌விடையை மு‌ன்கூ‌ட்டியே யோ‌சி‌க்காம‌ல், ‌விடையை‌க் க‌ண்ட‌‌றியு‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் அவ‌ர்க‌ள் அ‌ளி‌க்கு‌ம் ‌விள‌க்க‌‌ம் ‌மிகவு‌ம் மு‌க்‌கியமாக கவ‌னி‌க்க‌த்த‌க்க ஒ‌ன்று என‌க் கூ‌றியு‌ள்ளா‌ர். கே‌ள்விகளு‌க்கான ப‌திலை மன‌ப்பாடமாக ஒ‌ப்‌பி‌க்காம‌ல், குழந்தைக‌ள் அ‌ந்த ப‌திலை‌த் த‌ங்களு‌க்கு‌ள்ளாகவே ‌விள‌க்க முனையு‌ம் போது அவ‌ர்க‌ளி‌ன் க‌‌ற்கு‌ம் ‌திற‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்ற அடி‌ப்படை‌யி‌ல் தா‌ன் இ‌ந்த ஆ‌ய்வு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டதாக பெ‌த்தா‌‌னி ‌ரி‌ட்டி‌ல் ஜா‌ன்ச‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil