Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல் உயிரிகள் பற்றி அறிவோம்

Webdunia
கடலில் வாழ்வன என்றால் மீன், நண்டு, தாவரங்கள் தவிர சிப்பிகள் மட்டும் தான் நமது நினைவில் இருக்கும்.

ஆனால் கடலில் வாழு‌ம் உ‌யி‌ரின‌ங்க‌ள் நிறைய உண்டு. அதாவது கடல் அல்லி, கடல் தாமரை, ஆல்கை நோநேரியா என்பவை அதில் முக்கியமானவையாகும்.

கடல் உயிரி என்று சொல்லிவிட்டு தாவரங்கள் பெயரைச் சொல்லுவதாக எண்ண வேண்டாம். இவை அனைத்தும் கடல்வா‌ழ் உயிரிதான்.

கடல் அல்லி

கடல் அல்லி என்பது, கடல் நீரில் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டு வசிக்கும். முன் பகுதியில் வாயைச் சுற்றி பல கைகள் காணப்படுகின்றன. இவை இரையைப் பிடிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கும் பயன்படுகின்றன.

பார்ப்பதற்கு செடி போன்று காட்சி அளிக்கும் இது ஒரு அரிய உயிரியாகும். அதன் அருகில் வரும் மீன்களை பிடித்து உண்ணும்.

கடல் தாமரை ( Sea anamone)

webdunia photoWD
கடல் தாமரையின் வாய்ப் புறத்தைச் சுற்றி காணப்படும் கைகள் ஒரு தாமரை மலரின் இதழ்கள் போன்று தோற்றமளிக்கும். இது ஓர் ஈரடுக்கு உயிரி.

துறவி எனப்படும் உயிரியோடு இது கூட்டு வாழ்க்கை நடத்துகிறது.

இது தன் அடிப்பகுதியை துறவி நண்டின் ஓட்டின் மீது ஒட்ட வைத்துக் கொள்கிறது. இதனால் நண்டு நகர்ந்து செல்லும் இடங்களுக்கெல்லாம் இதனால் செல்ல முடிகிறது.

அதனால் இவ்வுயிரியின் உணவுப் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. இதனிடமுள்ள கொட்டும் செல்கள் என்ற தனிச்சிறப்பு வாய்ந்தவை. இதனால் உயிரிகளைப் பிடிக்கவும் முடியும், எதிரிகளை அழிக்கவும் முடியும்.

ஆல்கை நோநேரியா ( Alcynonaria)

webdunia photoWD
ஆல்கை நோநேரியா ஒரு குழியுடலி. உடல் உருண்டை வடிவமானது. இரு பக்க சமச்சீர் கொண்டது. இது கடலுக்கடியில் இருக்கும் பாறைகளிலும், கற்களிலும் ஒட்டிக் கொள்ள வசதியாக ஒரு பசையைச் சுரக்கிறது. விலங்குகள் தோன்றிய பின் உருவான விலங்குகளில் இது மூன்றாவதாகத் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

இதுவும் ஈரடுக்கு உயிரிதான். இரண்டு அடுக்குகளுக்கு மத்தியில் வழவழப்பான திரவம் உள்ளது.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments