Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு‌த் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 13 மார்ச் 2012 (15:35 IST)
* ஸ்பெர்ம் வேல் என்ற திமிங்கலத்தின் மூளை தான் மிகவும் அதிக எடை உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன் எடை 9 கிலோ கிராம் ஆகும், மேலும் இது மனித மூளையை விட ஆறு மடங்கு அதிக எடை உள்ளதாம். இந்த திமிங்கிலத்துக்கு பெரிய தலை இருப்பதால் (அதாவது தன் உடலின் மூன்றின் ஒரு பங்கு) மூளைக்கு அதிகமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

* நோவா ( novae) நட்சத்திரங்களின் ஒளி மிகவும் பிரகாசமான ஒளியுடன் தோன்றுபவை. இந்த நட்சத்திரம் பெரிய டெலஸ்கோப்பைக் கொண்டு பார்த்தாலும் பார்ப்பதற்கு தெரியாமல் போகலாம், ஆனால் இதன் ஒளி மனித கண்களுக்கு‌த் தெரியும் அளவுக்கு பிரகாசித்து மறையும்.

* மிகப்பெரிய கோதுமைக் களம் கனடாவில் உள்ள அல்பர்டா என்ற இடத்தில், சுமார் 142 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

* ஹவாய் நாட்டின் மொலொகாய் என்ற வடக்கு கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய கடல் பாறை அமைந்துள்ளது. அது 1005 மீட்டர் (3300 அடி) உயரத்தைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

* உலகத்திலே மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் யூக்கலிப்டஸ் ( Eucalyptus) தான். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. காடுகளின் 8 சதவீதம் இம்மரமே உள்ளது. பிரேசில் நாட்டில் மட்டுமே 3.5 மில்லியன் ஏக்கரில் யூக்கலிப்டஸ் மரம் இருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments