Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திரனில் குடியேற நீங்கள் தயாரா?

சந்திரனில் குடியேற நீங்கள் தயாரா?
, வெள்ளி, 11 ஜூலை 2008 (11:54 IST)
சந்திரனில் வாழக்கை நடத்த முடியுமா? இந்தக் கேள்விக்குரிய பதிலை நீண்டகாலமாக ஆராய்ச்சி செய்து வந்த விண்வெளி ஆய்வாளர்கள், தற்போது நிலவில் குடித்தனம் செய்யும் நாள் வெகதொலைவில் இல்லை என்று கூறியுள்ளனர்.

சந்திரனில் தண்ணீரே இல்லை என்றும், கடுமையான வறட்சி நிலவுவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், அங்கிருந்து கடந்த 1970-களில் கண்டெடுக்கப்பட்ட பாறைப்படிமமான `வால்கனிக் கிளாஸ்'-ல் நடத்திய சோதனையின் அடிப்படையில் ச‌ந்‌திர‌னி‌ல் தண்ணீர் இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரனில் காணப்பட்ட தண்ணீர் குமிழிகள் சுமார் 3.3 முதல் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட இய‌ற்கை பாதிப்புகளா‌ல் இழந்திருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவரான ஆல்பர்டோ சால் கூறுகையில், "பெரும்பாலானவர்களின் கருத்து சந்திரனில் தண்ணீர் இல்லை என்பதே" என்றார்.

செவ்வாய் கிரக‌‌‌த்‌தி‌ன் அளவிலான ஒரு கிரகம், பூமி தோன்றிய காலத்தில் அதன்மீது மோதியதில் சந்திரன் உருவாகியிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த 1971-ம் ஆண்டில் அப்பல்லோ-15, நிலவுப் பயணத்தின் போது எடுத்து வரப்பட்ட பாறையை ஆய்வு செய்வதற்கு சால் மற்றும் அவரது குழுவினர் பிரத்யேக வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.

பாறைப்படிவத்தின் ஹைட்ரஜன் உடன் குளோரின், ஃபுளோரினையும் சேர்த்து கார்பன் - சல்ஃபர் போன்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி ஹைட்ரஜன் காணப்பட்டது வெளிப்புற ஆதாரத்தில் இருந்து அல்ல என்றும், சந்திரனிலேயே இருந்திருப்பதாகவும் ஆய்வு முடிவுக‌ளி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

சந்திரனில் தண்ணீர் இருந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், நாசாவின் சந்திரன் அகழ்வுப் பணிகளுக்கு மிக முக்கியமானதாக அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil