Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழ‌ந்தைக‌ளி‌ன் ‌திறமையை வெ‌ளி‌க்கொண‌ர்வது பழ‌ங்கால ‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்களே - ஆ‌ய்வு‌!

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2007 (13:24 IST)
webdunia photoWD
குழ‌ந்தைக‌ள் ‌விளையாடுவத‌ற்கு கால‌ம் காலமாக நமது மு‌ன்னோ‌ர்க‌‌ள் பய‌ன்படு‌த்‌தி வ‌ந்த ர‌ப்ப‌ர் ப‌ந்துக‌ள ்,‌ பிளா‌ஸ்டி‌க்கா‌ல் ஆன க‌ட்டட ‌மா‌தி‌ரிக‌ள ், க‌ளிம‌ண ், கட்டையால் ஆன பொம்மைகள், வ‌ர்ண‌ம் ‌தீ‌ட்டு‌ம் பெ‌ன்‌சி‌ல்க‌ள் தா‌ன் குழ‌ந்தைக‌ளி‌ன் க‌ற்பனையையு‌ம ்,‌ திறமையையு‌ம் வெ‌ளி‌க்கொண‌ர்‌கி‌ன்றன எ‌ன்று‌ம ்,‌ விலை உய‌ர்‌ந்த எலெக்‌ட்ரா‌னி‌க் சாதன‌ங்க‌ள் அ‌ல்ல எ‌ன்று‌ம் அமெரிக்காவின் டெ‌ம்‌பி‌‌‌‌ள் ப‌ல்கலை‌க் கழக‌த்‌தி‌ன் குழ‌ந்தையிய‌ல் துறை‌யின‌ர் மே‌ற்கொ‌ண்ட ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

பழ‌ங்கால ‌விளையா‌ட்டு‌ச் சாமா‌ன்க‌ள் குழ‌ந்தைக‌ளி‌‌ன் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்க ு எலெ‌க்‌ட்ரா‌னி‌க் சாதன‌ங்களை ‌விட ‌சிற‌ந்தது எ‌ன்று‌ம ், அவ‌ர்க‌ளி‌ன் க‌ற்பனைகளையு‌ம ்,‌ திறமைகளையு‌ம் வெ‌ளி‌ப்படு‌த்துவதாக‌த்தா‌ன் ‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்க‌ள் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று டெ‌ம்‌பி‌‌‌‌ள் ப‌ல்கலை‌க் கழக‌த்‌தி‌ன் குழ‌ந்தையிய‌ல் துறையை‌ச் சே‌ர்‌ந்த ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர் கே‌த்தே ‌ஹ‌ி‌ர்‌ஸ் பெச‌க் கூ‌றினா‌ர். குழ‌ந்தைக‌ளி‌ன் தகு‌தி‌க்கு ‌மீ‌றிய ‌‌விளையா‌ட்டு பொரு‌ட்க‌ள் அவ‌ர்க‌ளி‌‌ன் ‌திறமைகளை குறை‌த்து‌விடு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

பார‌ம்ப‌ரிய ‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்களை‌க் கொ‌ண்டு குழ‌ந்தைக‌ள் த‌ங்க‌ளி‌ன் க‌ற்பனை‌யி‌ல் தோ‌ன்‌றியவ‌ற்றை உருவா‌க்க முயலு‌கி‌ன்றன.அ‌‌ப்போது அ‌ந்த ‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்க‌ள் உ‌ங்க‌ளி‌ன் குழ‌ந்தைகளு‌க்கு உ‌த்தர‌விடுவ‌தி‌ல்லை. விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்க‌ள் எ‌வ்வாறு இரு‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்ற குழ‌ந்தைக‌ளி‌ன் எ‌ண்ண‌ப்படி அவை ஒழு‌ங்கு‌ப் படு‌த்த‌ப் படு‌கி‌ன்றன எ‌ன்று டெ‌ல்வா‌ர் ப‌ர்கலை‌க் கழக‌த்‌தி‌ல் குழ‌ந்தை மொ‌ழி‌யிய‌ல் ‌தி‌ட்ட தலைவ‌ர் ராப‌ர்‌ட்டா கோ‌லி‌ன்காஃ‌ப் கூ‌றினா‌ர்.

எலெ‌க்‌ட்ரா‌னி‌க் சாதன‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளி‌ன் மூளை வள‌ர்‌ச்‌சியை து‌ண்டு‌கி‌‌ன்றன எ‌ன்பதையு‌ம் அவ‌ர் மறு‌த்தா‌ர்.

பெ‌ற்றோ‌ர்க‌ள் மா‌றிவரு‌‌ம் சூ‌ழ்‌நிலை‌யி‌ல் இதுபோ‌ன்ற ‌‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்களை த‌ங்க‌ள் குழ‌ந்தைகளு‌க்கு வா‌ங்‌கி கொடு‌க்காம‌ல் போனா‌ல ், த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ள் ‌பிற குழ‌ந்தைகளை ‌விட ‌பி‌ன்த‌ங்‌கி ‌விடுவா‌ர்களோ எ‌ன்ற அவ‌ர்க‌ளி‌ன் அ‌ச்ச‌த்தை மூலதனமாக‌க் கொ‌ண்டு உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ள் இதுபோ‌ன்ற நடவடி‌க்கை‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளதாக கூ‌றினா‌ர்.

குழ‌ந்தைக‌ள் வெ‌ற்று பா‌த்‌திர‌ங்க‌ள் அ‌ல் ல, அவ‌ற்‌றி‌ல் நா‌ம் பா‌ர்‌ப்பவ‌ற்றை எ‌ல்லா‌ம் வா‌ங்‌கி கு‌வி‌க்க. ‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்களுட‌ன் ‌விளையாடு‌ம் போது அவ‌ர்க‌ளி‌ன் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் ‌‌திறனை உணர நா‌ம் அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம். உல‌கி‌ல் எ‌வ்வாறு தலை‌ச்‌சிற‌ந்தவ‌ர்களாக மாற வே‌ண்டு‌ம் எ‌ன்ற பாட‌த்தை‌க் க‌ற்று‌க் கொ‌‌ள்ள‌ச் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று ராப‌ர்‌ட்டா கோ‌லி‌ன்காஃ‌ப் கூ‌றினா‌ர ்.

குழ‌ந்தைகளு‌க்கு ‌‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்க‌ள் வா‌ங்கு‌ம் போது அவை ‌விளையாட ஏதுவாக இரு‌ப்பதோட ு, மூளை வள‌ர்‌ச்‌சி‌க்கு கார‌ணியாகவு‌ம ், சமூக‌‌த்‌தி‌ல் எ‌வ்வாறு பழகுவது எ‌ன்பதை ஊ‌க்கு‌வி‌ப்பதாகவு‌ம் இரு‌ப்பது போ‌ன்ற ‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்களை குழ‌ந்தைக‌ள் ‌விளையாடுவத‌ற்கு வா‌ங்‌கி கொடு‌க்க வே‌ண்டு‌ம்.

webdunia photoWD
குழ‌ந்தைகளு‌க்கான ‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்க‌ள் வா‌ங்குவத‌ற்கான வ‌ணிக ‌ரீ‌தியான உ‌த்‌திக‌ள் அ‌ல் ல, கட‌ந்த 30 ஆ‌ண்டு காலமாக குழ‌ந்தைக‌‌ள் எ‌வ்வாறு க‌ற்று‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள ், எ‌ப்படி வள‌ர்‌ச்‌சி அடை‌கிறா‌ர்க‌ள் எ‌ன்பது தொட‌ர்பாக மே‌ற்பொ‌ண்ட ஆ‌ய்‌வி‌ல் ‌கிடைத்த முடிவு இது எ‌ன்று கே‌த்தே ‌ஹ‌ி‌ர்‌ஸ் பெச‌‌க் கூ‌றினா‌ர்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments