Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் கண்காணிப்பு கருவி!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (15:00 IST)
மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் இன்று மக்களவையில் தாக்கல் செய்த ரயில்வே நிதி நிலை அறிக்கையில் ரயில்வேயின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டக்களை வெளியிட்டுள்ளார ்.

இதில் ரயில் போக்குவரத்து கண்காணிப்பு கருவியும் அடங்கும்.

ரயில் போக்குவரத்து கண்காணிப்பு கருவ ி

இந்தியாவில் இயக்கப்படும் அனைத்து ரயில்களையும் அடுத்த இரண்டு வருடங்களில் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளத ு. குறிப்பிட்ட ரயில் எந்தெந்த நிலையங்களுக்கு இடையே உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வசதி மட்டும் உள்ளத ு.

இதுவும் ரயில் நிலையங்களில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் உள்ள கருவியில் மட்டுமே தெரியும ்.

இப்போது ரயில்களில் அமைக்கப்பட உள்ள நவீன கருவி மூலம் குறிப்பிட்ட ரயில் எந்தெந்த இடத்தில் உள்ளது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும ்.

இதனால் ரயில் வழித்தடத்தில் விபத்து ஏற்பட்டால் உடனடி உதவிக்கு உள்ளூர் நிர்வாகத்தை எச்சரிக்க முடியும ்.

ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நேரம ், பயண வேகம் போன்றவைகளையும ், எந்த ரயில் நிலையங்களில் எத்தனை நிமிடம் நின்றுள்ளது என்பதையும் கண்காணிக்க முடியும ்.

குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ரயில் புறப்படுவது தாமதப்பட்டால் அதற்கான காரணம் என் ன? அமைச்சர்கள ், உயர் அதிகாரிகள் ரயிலில் ஏற தாமதமானதால் ரயில் தாமதமாக புறப்பட்டதா அல்லது ரயிலுக்கு கிடைக்க வேண்டிய சிக்னல் கிடைக்காத காரணத்தினால் தாமதப்பட்டதா என்பதை அறிய முடியும ்.

வ ி.ஐ. ப ி. என்று அழைக்கப்படும் முக்கியஸ்தர்களுக்காக ரயில் காத்திருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது என்ற புகார ், டிக்கட் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் மற்ற பயணிகளிடம் இருந்து அடிக்கடி வருகிறத ு. இது உண்மையான புகாரா என்பது இந்த நவீன கருவி பொருத்துவதன் மூலம் தெரிந்து விடும ்.

விமான போக்குவரத்தில் உள்ளது போல் விமானம் புறப்பட்டவுடன் தரை கட்டுப்பாடு தளத்துடன ், விமானி இடைவிடாது தொடர்பு கொண்டு விமானத்தை இயக்குவது போல் ரயிலையும் இயக்கமுடியும ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

Show comments