ரயில் கட்டணம் உயராது: லாலு சூசகம்!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (12:46 IST)
ரயில் கட்டணத்தை உயர்த்தாமல ், மக்களுக்கான ரயில்வே நிதி நிலை (பட்ஜெட ்) அறிக்கையை தாக்கல் செய்யப் போவதாக ரயில்வே அமைச்சர் லூலு பிரசாத் யாதவ் சூசகமாக தெரிவித்தார ்.

பெங்களூருவில் யஸ்வந்த்பூரில் மாதிரி ரயில் நிலையத்தை இன்று லாலு பிரசாத் யாதவ் திறந்து வைத்து சிற்ப்பரையாற்றினார ்.

அப்போது அவர் கூறியதாவத ு. ரயில்வே நிதி நிலை (பட்ஜெட ்) அறிக்கையில் ரயில்களில் பொதுப் பெட்டிகளை அதிகரிக்கவும ், பயணிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்தவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும ்.

ரயில்வே கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்கனவே உள்ள இருப்பு பாதைகளை அகலப்படுத்துவத ு, நீட்டிப்பு செய்வது உட்பட 4 ஆயிரம் கிலோ மீட்டருக்கு புதிய பாதைகளை சேர்த்துள்ளத ு. இதனால் இந்த நிதி ஆண்டில் இருந்து ரயில்வே மத்திய அரசுக்கு லாப ஈவு பங்கு செலுத்தத் துவங்கியுள்ளத ு.

ரயில்வே அலுமினிய சரக்கு பெட்டிகளை அறிமுகப்படுத்த உள்ளத ு. இதனால் போக்குவரத்துக்கான செலவில் 40 விழுக்காடு குறையும ். அத்துடன் அதிக சரக்கு பெட்டிகளை இணைப்பதால் ரயில்வேயின் திறனும் அதிகரிக்கும ்.

ரயில்வேயின் வருவாய் இந்த நிதி ஆண்டில் (2007-08) நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 20 விழுக்காடு அதிகரித்துள்ளத ு. தினசரி 1 கோடியே 50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர ். தினசரி 11 ஆயிரம் ரயில்களை இயக்குகிறத ு. 7,500 ரயில் நிலையங்களை பராமரிக்கிறுத ு. ரயில்வேயில் 14 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர் என்று லாலு தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

Show comments