Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைமுக வரி வருவாய் 14 விழுக்காடு உயர்வு!

Webdunia
இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் கலால் வரி (உற்பத்தி வர ி) ரூ.10,293 கோடி வசூலாகி உள்ளது. இது சென்ற வருடம் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14.6 விழுக்காடு உயர்வு.
சென்ற வருடம் அக்டோபரில் கலால் வரியாக ரூ.9,066 கோடி வசூலானது.

அக்டோபர் மாதத்தில் சுங்க வரி (ஏற்றுமதி இறக்குமதி வர ி ) ரூ.9,353 கோடி வசூலாகியுள்ளது. இது சென்ற அக்டோபரில் வசூலானதை விட 25 விழுக்காடு அதிகம். சென்ற அக்டோபரில் சுங்க வரி ரூ.7,503 கோடி வசூலானது.

இந்த நிதியாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதத்தில் சுங்க வரியாக ரூ.57 ஆயிரத்து 833 கோடியும், கலால் வரியாக ரூ.64 ஆயிரத்து 948 கோடியும் வசூலாகியுள்ளது. இரண்டும் சேர்ந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 781 கோடி வசூலாகியுள்ளது.

இந்த மத்திய நிதி நிலை அறிக்கையின் (பட்ஜெட ்) மதிப்பீட்டின் படி முதல் ஏழு மாதங்களில் கலால் வரி 50 விழுக்காடும், சுங்க வரி 59 விழுக்காடும் வசூலாகியுள்ளது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதத்தில் சேவை வரியாக ரூ.21 ஆயிரத்து 891 கோடி வசூலாகியுள்ளது. இது சென்ற வருடத்தின் ஆறு மாதத்தை விட 36.8 விழுக்காடு உயர்வு. சென்ற வருடம் முதல் ஆறு மாதத்தில் சேவை வரியாக ரூ.15 ஆயிரத்து 997 கோடி வசூலாகி இருந்தது.


காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?

நீண்டநேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் வரும் இடுப்புவலி.. நிவாரணம் என்ன?

வாயுக்கோளாறு ஏற்படுவது ஏன்? தீர்வு என்ன?

Show comments