பிங்க் நிறத்தில் பொருளாதார ஆய்வறிக்கையின் அட்டை - ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (15:59 IST)
வருகிற பிப்ரவரி 2ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பொருளாதார ஆய்வறிக்கையின் அட்டை பிங்க் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 
2018ம் ஆண்டிற்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 2ம் தேதி நிதியமச்சர் அருண்ஜேட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். 
 
இந்நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், நேற்று செய்தியாளர்கள் முன்னிலையில்  பொருளாதாரா ஆய்வறிக்கையை பார்வைக்கு காட்டினார்.
 
கடந்த ஒரு ஆண்டின் பொருளாதாரா ஆய்வு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், முக்கியமாக நாட்டின் மேக்ரோ பொருளாதார சூழ்நிலை குறித்த விபரங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
அந்த ஆய்வறிக்கையின் அட்டை பிங்க் நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி விளக்கம் அளித்த சுப்பிரமணியம் பிங்க் நிறம் பெண்களை குறிப்பதால், பெண்களின் உரிமையை புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பொருளாதார ஆய்வறிக்கையின் அட்டை, பிங்க் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments