கேப்டன் டி.வி. சோதனை ஒளிபரப்பு துவ‌க்க‌ம்

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2010 (10:51 IST)
‌ சி‌னிமா‌வி‌ல் நடி‌த்து, அர‌சியலு‌க்கு‌ள் நுழை‌ந்து‌ள்ள விஜயகாந ்‌த் பு‌திதாக டி‌வி சேன‌ல் ஒ‌ன்றை துவ‌க்கு‌கிறா‌ர். கே‌ப்ட‌ன் டி‌வி எ‌ன்று பெய‌ரிட‌ப்ப‌ட்ட அ‌ந்த சேன‌லி‌ன் சே ாதனை ஒளிபரப ்பு தொட‌ங்‌கியு‌ள்ளது.

கே‌ப்ட‌ன் டி‌வி‌யின் சோதனை ஒளிபரப்பை தே.மு.தி.க. கட்சித் தலைவரான விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.

WD
சோதனை ஒளிபரப்பைத் தொடர்ந்து கேப்டன் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் எல்.கே.சுதீஷ் சென்னையில் நேற்று செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக ஒரு சேனலை கொண்டு வர வேண்டும் என்று விஜயகாந்த் விரும்பியதன் விளைவே இப்போது கேப்டன் டி.வி.யாக உருவெடுத்திருக்கிறது. இது பொழுதுபோக்கு சேனலாகவும் இருக்கும்.

இப்போது ஆசிய கண்டம் முழுவதும் கேப்டன் டி.வி.யில் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். விரைவில் ஐரோப்பா கண்டத்திலும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் தெரியத் தொடங்கும்.

வரும் மே 1-ந் தேதி முதல் செய்திகளும் ஒளிபரப்பாக இருக்கிறது. தினமும் 4 முறை ஒளிபரப்பாகும் செய்திகளை பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் நடக்கும் எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

எங்கள் சேனலில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட அரசியல் செய்திகள் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பாகும்.

காலையில் அனைத்து மத பக்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். தொடர்ந்து பெண்களுக்காக அவர்கள் ரசிக்கும் விதத்தில் மெகா தொடர்களும், சினிமா ரசிகர்களுக்காக திரைப்படங்களும் ஒளிபரப்பாகும்.

அடுத்த ஆண்டு ஜனவரி பொங்கல் முதல் 24 மணி நேர செய்திச் சேனலும் தொடங்கப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

Show comments