10 தொகுதிகள் காங்கிரசுக்கு வெற்றியா? தோல்வியா?

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (21:31 IST)
கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அன்றைய திமுக தலைவர் கருணாநிதி 15 தொகுதிகளை ஒதுக்கினார். அதில் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக 22 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றது
 
ஆனால் அதே நேரத்தில் 2014ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை திமுக சேர்த்து கொள்ளவில்லை. அந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. திமுக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 34 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது
 
எனவே காங்கிரஸ் இல்லாமல் திமுகவும், திமுக் இல்லாமல் காங்கிரசும் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்பது உறுதியானதால் இந்த முறை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளது. எனவே 2009ஆம் ஆண்டு 8 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது லாபமாகவே கருதப்படுகிறது. அதேபோல் இம்முறை மதிமுக உள்பட ஒருசில கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் திமுக் 30க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments