சென்னை சென்ட்ரல் பெயரை மாற்றியது சரியா?

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (21:56 IST)
சென்னையின் அடையாளங்களில் ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம். சென்னை என்று கூகுளில் தேடினால் முதலில் வருவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமாகத்தான் இருக்கும். பழைய படங்கள் முதல் லேட்டஸ் படங்கள் வரை சென்னையை காண்பிக்க வேண்டும் என்றாலே உடனே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைத்தான் காண்பிப்பார்கள். சென்ட்ரல் ரயில் நிலையம் என்று ஒவ்வொரு மக்களின் மனதிலும் பதிந்துள்ளது
 
இந்த நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு நீளமான பெயரை சொல்லி கவுண்டரில் ஒருவர் டிக்கெட் கேட்க முடியுமா? அதற்குள் அவர் செல்ல வேண்டிய ரயிலே கிளம்பிவிடும். மேலும் இந்த புதிய பெயரில் சென்னை என்பதே இல்லை. என்பதால் தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் குழப்பம் அடையவும் வாய்ப்பு அதிகம். நாம் உண்மையில் சென்னைக்குத்தான் டிக்கெட் எடுத்தோமா? என்ற குழப்பம் வரும்
 
எம்.ஜி.ஆர் பெயரை ஞாபகம் வைத்து கொள்ள பல வழிகள் உள்ளது. அவரது பெயரை இன்னும் பல தலைமுறைகள் மறக்கவும் முடியாது. அந்த  அளவுக்கு அவருடைய புகழ் நிலைத்து நிற்கும். ஆனால் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குறிப்பாக வெளிமாநில பயணிகள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையம் ஒன்றுக்கு சென்னை என்று கூட இல்லாத இவ்வளவு நீளமான பெயர் தேவையா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. எனவே மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாகவும் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! யாரை காப்பாற்ற துடிக்கிறீங்க?? - திமுகவுக்கு அன்புமணி கேள்வி!

நீல நிறமாக மாறிய நாய்கள்! செர்னோபில் அணு உலை அருகே விநோதம்!

இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பைக் டாக்சி டிரைவர்.. கணவரின் தந்திரமான சம்பவம்..!

நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தந்தைக்காக பழிவாங்க திட்டமிட்ட கல்லூரி மாணவி.. ஆசிட் வீசியதாக பொய் புகார்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments