உலகக்கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் ரஷ்யா அபார வெற்றி

Webdunia
வியாழன், 14 ஜூன் 2018 (23:06 IST)
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்று ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. இன்றைய முதல் போட்டி ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின.
 
பலம் வாய்ந்த சவுதி அரேபியா அணியை சொந்த நாட்டில் விளையாடும் தைரியத்தில் ரஷ்ய அணி ஆக்ரோஷமாக எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் ரஷ்யா அணி, சவுதி அரேபியா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ரஷ்யாவின் யூரி கசின்ஸ்கி முதல் கோலையும்,  ரஷ்ய வீரர் டெனிஸ் செரிஷேவ் இரண்டாவது கோலையும், ரஷ்யாவின் சயூபா 3வது கோலையும், ரஷ்யாவின் டெனிஸ் 4வது கோலையும், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ரஷ்யா மற்றொரு கோல் அடிக்க, முடிவில் 5-0 என கோல் கணக்கில் அபாரமாக வென்றுள்ளது ரஷ்ய அணி.
 
பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட சவுதி அரேபியா அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை என்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ரஷ்ய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments