Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு முன் அறிவிப்பு, திருச்சியில் மாநாடு: ரஜினியின் மெகா பிளான்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (20:31 IST)
இதோ வருகிறார், அதோ வருகிறார் என கடந்த 20 வருடங்களாக ஜகா வாங்கி கொண்டிருந்த ரஜினிகாந்த், ஒரு வழியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளிவந்து ஒரு வருடம் ஆகவுள்ள நிலையிலும் இன்னும் அரசியல் கட்சி அறிவிப்பு வரவில்லை என்பதால் ஒருசிலர் அவநம்பிக்கை அடைந்தனர். ஆனால் 'பேட்ட' படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் கட்சி ஆரம்பிக்கும் பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும் விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பு வெளிவரும் என்றும் ரஜினி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்

இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து சென்றபின்னர் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் என்பதை உறுதி செய்த பிரதமர், தமிழக பாஜகவினர்களை களத்தில் இறங்க தயாராகும்படி அறிவுறுத்தினாராம். இந்த தகவல் ரஜினிக்கு சென்றதை அடுத்து தீபாவளிக்கு முன் கட்சி அறிவிப்பு பின்னர் டிசம்பரில் கட்சி பொதுக்கூட்டம் என்பதை முடிவு செய்துவிட்டாராம். திருச்சியில் பொதுக்கூட்டம் வைத்தால் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து வந்தாலும் தொண்டர்கள் ஆறு மணி நேரத்திற்குள் வீட்டுக்கு திரும்பிவிடலாம் என்ற அறிவுரையின்படி முதல் கூட்டம் திருச்சியில் நடத்த ரஜினி திட்டமிட்டுள்ளாராம்

மேலும் ரஜினியின் கட்சியில் சேர அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் சேர தயாராகி வருகின்றார்களாம். அதேபோல் சிறிய கட்சிகள் நடத்தி வரும் ஒருசிலரும் கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு ரஜினி கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்களாம். எனவே இந்த தீபாவளிக்கு ரஜினியின் பட்டாசு வெடிப்பது உறுதி என ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments