காவிரி விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்த பொன்.ராதாகிருஷ்ணன்!

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (18:52 IST)
காவிரி நதிநீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பில் திட்டம் என்பது பற்றி தெளிவாக கூறியிருந்தால் பிரச்சனையில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என்று கர்நாடக அரசும் கூறி வந்த நிலையில் தற்போது மத்திய அரசும் அதே கூறியுள்ளது.
 
நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால். மத்திய அரசு மீது சனிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் எல்லோரும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உச்சநீதிமன்றம் தீர்ப்பில் திட்டம் என்பது பற்றி தெளிவாக கூறியிருந்தால் பிரச்சனையில்லை. தமிழக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு 100% பாஜக அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேய் வாடா.. டீ வித்துட்டுப் போடா!. புதுச்சேரியில் தவெக ஆதரவாளரிடம் கோபப்பட்ட சீமான்!...

இனிமேல் கம்ப்யூட்டரில் கேம் விளையாட இண்டர்நெட் தேவையில்லை.. கூகுள் பிக்சல் 10 பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

நான் ஒரு தீவிரமான இந்து, அனந்தகிரி மலையில் பிரமாண்ட கோயில்;; தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு..!

ஹார்மூஸ் நீரிணையை கடந்த இன்னொரு இந்திய கப்பல்.. கிரீன் ஆஷாவுக்கு பச்சைக்கொடி..!

CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments