ஒரு கோவிலையே மொட்டை போட்டுவிட்டனர்: பொன். மாணிக்கவேல் வேதனை

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (09:34 IST)
சிலைகளையும் தூண்களையும் திருடி ஒரு கோவிலையே மொட்டை போட்டுவிட்டனர் என சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்பீர்ஷா வீட்டில் நேற்று திடீரென சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான ஐம்பது பேர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள், கோவில் கல்தூண்கள், கலைச்சிற்பங்கள் சிக்கின.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்.மாணிக்கவேல், 'இன்று கைப்பற்றப்பட்ட தொன்மை வாய்ந்த சிலைகள் அனைத்தும் கோவில்களில் இருந்தே திருடப்பட்டவை. சிலைகள், கல்தூண்கள் என ஒரு கோவிலையே மொட்டை போட்டுவிட்டனர். இதுவரை சிலைகளை விற்பனை செய்ய தமிழகத்தில் யாருக்கும் லைசென்ஸ் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு சிலையும் ஒரு பெரிய     வைரத்திற்கு ஈடானது. இந்த சிலைகளை ரன்பீர்ஷா திருடவில்லை என்றாலும் இவர் யாரிடம் இருந்து இந்த சிலைகளை வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவர் இந்த சிலைகளை விற்கும் எண்ணம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இவரை சாட்சிகள் கிடைத்த பின்னரே இவரை கைது செய்ய முடியும்' என்று பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

திடீரென சென்னையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு எச்சரிக்கை:

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments