தல அஜித்தின் விஸ்வாசம் பட போஸ்டரை கவனிச்சீங்களா!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (13:42 IST)
விஸ்வாசம் பட போஸ்டரை கவனிச்சீங்களா, அதுல தல அஜித் , ஹாய் ஆக ராயல் என்பீல்டு  புல்லட் ஓட்டியபடி சிரித்துக்கொண்டே காணப்படுவார். அந்த புல்லட் வண்டி நம்பர் TN60 AB 2435 என்று இருக்கும். இந்த வண்டி நம்பர் தேனி மாவட்ட வாகன பதிவு எண் ஆகும்.

எனவே படத்தின் கதை தேனி மாவட்டத்தில் நடப்பது போன்று எடுக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் நடப்பது போன்று தான் விஸ்வாசம் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கிராமத்து செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் அஜித் மதுரை வட்டார வழக்கு தமிழ் பேசி நடித்துள்ளார். இதற்கான டப்பிங் பணிகள் அண்மையில் நடந்து முடிந்தது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் தல அஜித் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இரண்டு அஜித்களுக்கு ஜோடியாக காலா ஈஸ்வரி மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் கூட்டணி பலம் ஜெயிக்காது.. மக்கள் மாற்றத்தை தேடுகிறார்கள்: தவெக நிர்வாகிகள் நம்பிக்கை..!

விஜய்யின் தவெக, உபயோகம் இல்லாத ஆறாவது விரல்: ராஜேந்திர பாலாஜி

ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்னவர் வீர வசனம் பேசுறார்!. .விஜயை பொளந்த கே.என்.நேரு!...

விஜய்க்கு சீமான்கிட்ட போறாதுதான் ஒரே வாய்ப்பு!.. ரங்கராஜ் பாண்டே ராக்ஸ்!...

விஜய் தம்பி.. சின்ன தம்பி.. அவர் ஒரு ஜீரோ!.. தமிழிசை சவுந்தரராஜன் நக்கல்..

அடுத்த கட்டுரையில்
Show comments