கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (11:35 IST)
வருகிற மே 12 ந் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 12 ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 24 ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை 25ந் தேதி நடைபெற உள்ளது.  மனுக்களை வாபஸ் பெற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும். 
 
கர்நாடகாவில் ஆளுங் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டுமென, சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் நின்றாலும் தங்கம் விலை உயரவில்லை.. இன்றும் சரிவு.. சென்னை நிலவரம்..!

டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம்..!

14.2 கிலோ சிலிண்டருக்கு பதில் இனிமேல் 10 கிலோ சிலிண்டர் தானா? பொதுமக்கள் அதிருப்தி?

உன்னால தான் ஈரான் போரை தொடங்கினேன்.. பாதுகாப்பு செயலர் மீது பழியை தூக்கி போட்ட டிரம்ப்..!

முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து போட்டியிடும் விஜயன்.. பெயர் குழப்ப யுக்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments