Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (21:17 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி வைத்து போட்டியிடுமா? என அக்கட்சியின் நிர்வாகிகளுக்கே புரியாத புதிராக உள்ளது
 
கடந்த சிலநாட்களுக்கு முன் ஒருசில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கமல் பேட்டியளித்தார். ஆனால் அதன் பின் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 
 
இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி கட்சியின் செய்தி தொடர்பாளரும் கவிஞருமான சினேகன் கூறியபோது, திமுகவுடன் கூட்டணி இல்லை என்பது போல் தினகரன் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும், தினகரன், தன்னைப் பாதுகாக்கவும், தன்னை அடையாளப் படுத்தவும் மட்டுமே கட்சி ஆரம்பித்துள்ளார். எனவே அவருடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றார்.வைத்துள்ளதாகவும் கூறினார். மேலும் ஊழல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறும் கமல், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் காங்கிரஸ் கட்சி ஊழலே செய்யவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த சினேகன், 'பாஜகவை ஒப்பிடும் போது, காங்கிரஸ் ஊழல் கட்சியில் ஊழல் குறைவுதான் என்று பதிலளித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments