Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மை நின்றது; நீதி வென்றது: சிறையிலிருந்து விடுதலையான கருணாஸ் பேட்டி

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (08:32 IST)
கடந்த 16ஆம் தேதி நகைச்சுவை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக முதல்வரையும் காவல்துறை அதிகாரி ஒருவரையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு, ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது 'ஐபில் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவும் இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இரண்டு வழக்குகளில் இருந்தும் தனக்கு ஜாமீன் வேண்டும் என கருணாஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று அவருக்கு இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததையடுத்து இன்று காலை கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தினமும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், 'இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்மீதான வழக்கில் உண்மை நின்றது; நீதி வென்றது என்று ஆவேசமாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments