Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் டீஸர் இன்று ரிலீஸ்!

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (11:38 IST)
கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் டீஸர் இன்று ரிலீஸாக இருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. கார்த்தி ஜோடியாக சயீஷாவும், அவருடைய அத்தைப் பெண்களாகப் பிரியா  பவானிசங்கர், அர்த்தனா பினுவும் நடித்துள்ளனர். சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  டி.இமான் இசையமைத்துள்ளார்.
 
சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில்  இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி வேடத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இந்தப் படத்தின் டீஸர், இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

பொன்முடி மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments