Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 பெண்களை கற்பழித்த வழக்கில் ஹாலிவுட் நடிகர் காலன் வால்கர் கைது

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (16:13 IST)
'சூப்பர் ப்ளை' படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் காலன் வால்கர் பல பெண்களை பாலாத்காரம் செய்ததாக புகார் எழுந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார், 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர்  காலன் வால்கர், இவர் பிரபல ரார் இசை பாடகரும் ஆவார்.  பிரபல ஹாலிவுட் படமான 'சூப்பர் ப்ளை' படத்தில் வால்கர் நடித்துள்ளார். 2017ம் ஆண்டு ஹல்லே பெர்ரி மற்றும்  டேனியல்  கிரயாக் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 
லாஸ் ஏஞ்செல்ஸ் நகர போலீசார் பாலியல் புகார் குறித்து கூறுகையில், "23 வயதாகும் நடிகர் வால்கர் இணைதளம் மூலம் கடந்த 2016ம் ஆண்டு பல மாடல் அழகிகளுக்கு, மாடலிங்கில் மற்றும் நடிக்க வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதை நம்பி அவருடன்  பல பெண்கள் நெருங்கி பழகினர். இதில் 5 பெண்கள் தங்களை வால்கர் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். 
 
3 பெண்கள் வால்கர் மீது பாலியல் தொல்லை அளித்துவந்ததாக புகார் கொடுத்துள்ளனர். ஒரு பெண் தன்னுடன் வால்கர் ஓரல் பாலியல் தொல்லை கொடுத்தாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மொத்தமாக வால்கர் மீது 9 பெண்களை பாலியல் புகார் அளித்துள்ளனர், இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் விடுவிக்க 10 லட்சம் அமெரிக்க டாலர் பிணையை தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது" என்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்