Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா அறிவிப்பால் பரபரப்பு

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (22:28 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியதாவது: சவாலை ஏற்போம்: தமிழகத்துக்குள் மோடி நுழைய முடியாத சூழ்நிலை ஏற்படுத்துவாராம் ஸ்டாலின். பாஜக இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது. ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டக் கொன்ற திமுக விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா.? நடிப்பதா? என்று பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

தங்கம் விலை இன்று சற்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

புதுவையில் திமுக எம்.எல்.ஏக்கள் அமளி.. குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றம்..!

திமுக கொடிக்கம்பம் அகற்றும்போது விபரீதம்: மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி.. 4 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments