மானமுள்ள இந்துக்கள் திமுகவில் இருந்து வெளியே வரவேண்டும்: எச்.ராஜா

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (07:52 IST)
அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் மாறி மாறி விமர்சனம் செய்து வரும் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது திமுகவும் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற மு.க.ஸ்டாலின், ஐயர் வைத்த பொட்டை அழித்தது குறித்து கருத்து கூறிய எச்.ராஜா, 'பொது இடத்தில் பொட்டை அழித்து கோடிக்கணக்கான இந்துக்களை ஸ்டாலின் அவமதித்துள்ளதாகவும், பொட்டை வைக்கும் முன்னரே பொட்டு வைக்க வேண்டாம் என்று கூறியிருக்கலாம், அல்லது மறைவான இடத்தில் பொட்டை அழித்திருக்கலாம், பொதுமக்கள் முன்னிலையில் பொட்டை அழித்து இந்துக்களை அவமரியாதை செய்துவிட்டார் என்றும் எச்.ராஜா கூறினார். திமுகவில் இருப்பவர்கள் 90% பேர் இந்துக்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் கூறியபடி அந்த 90% பேர் மானமுள்ள இந்துக்களாக இருந்தால் திமுகவில் இருந்து அவர்கள் வெளியே வரவேண்டும் என்றும் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்தார்.
 
MK Stalinமேலும் தமிழகத்தில் சிலைகள் மட்டும் மாயமாக மறைவதில்லை என்றும் கோவில்களும் மறைந்து வருவதாக எச்.ராஜா கூறியுள்ளார். அறநிலையத்துறையின் கணக்கின்படி தமிழகத்தில் 38 ஆயிரத்து 635 கோவில்கள் இருந்தன. ஆனால் தற்போது அதில் 2 ஆயிரம் கோவில்கள் வரை காணவில்லை. கோவில்கள் இருந்த இடத்தில் தற்போது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களும், ஓட்டல்களும் உள்ளதாகவும், அந்த இடத்தை எல்லாம் அறநிலையத்துறை மீட்டெடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்.ராஜா மேலும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments