சர்வாதிகாரி டாஸ்க்: ஜெயலலிதாவை அவமதிப்பதாக கமல் மீது போலீஸ் புகார்

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (21:57 IST)
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடந்து கொண்டிருக்கும் சர்வாதிகாரி டாஸ்க் ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சனம் செய்வதாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசன் மீது போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை தொடவிருக்கும் நிலையில் இன்னும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பை அடையவில்லை. எனவே ஏதாவது அதிரடி செய்ய வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் திரைக்கதை ஆசிரியர்கள் இந்த வாரம் சர்வாதிகாரி ராணி என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளனர். அதிலும் ஏற்கனவே கர்வத்தில் அனைவருடனும் சண்டை போட்டு வரும் ஐஸ்வர்யாவுக்கு ராணி பட்டம் கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில் இந்த சர்வாதிகார ராணி டாஸ்க், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த லூயிசாள் ரமேஷ் என்ற வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் விளம்பரத்திற்காக இதுபோன்று ஜெயலலிதாவை விமர்சனம் செய்யும் வகையில் டாஸ்க் கொடுத்துள்ளதாகவும், எனவே நடிகர் கமல்ஹாசன் மீதும், பிக்பாஸ் நிறுவனம் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரமேஷ் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேகர்பாபுவுடன் திடீர் சந்திப்பு!.. திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?...

400 வைரம்!. ஆனந்த் அம்பானி வாட்ச் எவ்ளோ கோடி தெரியுமா?!....

எங்க கல்யாணம் பண்ணிக்கொடுக்கனும்னு தெரியும்!.. தேமுதிகவுக்கு வரன் தேடும் பிரமேலதா...

5 நாட்களில் தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை!.. டுடே அப்டேட்!..

டிரெஸ் போடுவதில் நேரம் வேஸ்ட் பண்ணாத மார்க் சக்கர்பெர்க்!.. வெற்றியின் சீக்ரெட்!....

அடுத்த கட்டுரையில்
Show comments