பாபி சிம்ஹா, சதீஷ் நடிக்கும் ‘அக்னி தேவ்’

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (16:55 IST)
பாபி சிம்ஹா, சதீஷ் நடிக்கும் படத்திற்கு ‘அக்னி தேவ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
 
சரத்குமார் நடித்த ‘சென்னையில் ஒருநாள் 2’ படத்தை இயக்கியவர் ஜான் பால்ராஜ். அவரும், புதுமுக இயக்குநரான ஷாம் சூர்யா இருவரும் இணைந்து ஒரு படத்தை இயக்குகின்றனர். இந்தப் படத்துக்கு ‘அக்னி தேவ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்க, முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை, கோயம்புத்தூரில் உள்ள சாய்பாபா கோயிலில் நடைபெற்றது.
 
பாபி சிம்ஹா தற்போது ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் நடித்துள்ளார். விக்ரமுக்கு வில்லனாக. மூன்று கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இதுதவிர, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிநடிக்கும் பெயரிடப்படாத படத்தில், ரஜினியின் மகனாக நடிக்கிறார் பாபி சிம்ஹா. இந்தப் படத்தின் ஷூட்டிங் டேராடூனில் நேற்று தொடங்கியது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநரின் குடும்பத்தார் மீது வரதட்சணை, கொலை முயற்சி குற்றச்சாட்டு: மருமகள் பரபரப்பு புகார்!

பதவியேற்ற 9 மாதங்களில் பிரசார் பாரதியின் தலைவர் விலகல்.. என்ன காரணம்?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

அடுத்த கட்டுரையில்
Show comments