Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரம்பு மீறினால் நீங்களும் கொல்லப்படுவீர்கள் - பத்திரிகையாளர்களை மிரட்டும் பாஜக தலைவர்

Webdunia
ஞாயிறு, 24 ஜூன் 2018 (10:53 IST)
வரம்பை மீறி செய்தி வெளியிட்டால் நீங்களும் கொல்லப்படுவீர்கள் என ஜம்மு - காஷ்மீர் மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவை சேர்ந்த எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் சர்ச்சைக்குரிய வகையில்  பேசுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் தொணியில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
சமீபத்தில் "ரைசிங் காஷ்மீர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் லால் சிங், காஷ்மீரில் உள்ள பத்திரிகையாளர்கள் செய்திகளை வெளியிடுவதில் ஒரு வரம்பை வகுத்துக் கொள்ள வேண்டும். இல்லையனில் சுஜாத் புகாரிக்கு ஏற்பட்ட நிலைதான் மற்றவர்களுக்கும் நேரக்கூடும் என மிரட்டல் தொணியில் பேசினார். இவரது பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments