Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் அறிமுகமாகிறார் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி

Webdunia
செவ்வாய், 13 மார்ச் 2018 (17:55 IST)
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி, சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். 
இரண்டு திருமண முறிவுக்குப் பிறகு, இஸ்லாமிய மதத்துக்கு மாறி மூன்றாவதாக ஜபருன்னிசா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
 
படங்களுக்கு இசையமைப்பதோடு, தயாரிப்பையும் தொடங்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த கே புரொடக்‌ஷன்ஸ்  நிறுவனத்துடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண், ரைஸா  இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்தில்தான் யுவனின் மனைவி ஜபருன்னிசா அறிமுகமாகிறார். நடிகையாக அல்ல, காஸ்ட்யூம் டிசைனராக! ரைஸாவிற்கு அவர்தான் உடைகளை வடிவமைத்துக் கொடுக்கிறார். யுவனின் குடும்பத்தில் வாசுகி பாஸ்கர் என ஏற்கெனவே பிரபலமான ஒரு காஸ்ட்யூம் டிசைனர் இருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்