Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரை திடீரென சந்தித்த நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, லிசி

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (07:56 IST)
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உருக்குலைந்து போன நிலையில், அம்மாநிலத்திற்கு நிவாரண நிதியாக கோலிவுட் திரையுலகினர் தாராளமாக அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை நேரில் சந்தித்த நடிகைகள் குஷ்பு, சுஹாசினி மற்றும் லிசி ஆகியோர் தாங்கள் சேகரித்த நிதியான ரூ.40 லட்சத்தை நிவாரண நிதியாக அளித்தனர்

கோலிவுட்டில் 80கள் குழு என்று ஒரு குழு உள்ளது. இந்த குழுவில் கடந்த 80ஆம் ஆண்டுகளில் புகழ் பெற்றிருந்த நடிகர், நடிகையர் உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு வருடமும் இவர்கள் அனைவரும் ஓரிடத்தில் சந்தித்து தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வதுண்டு

இந்த நிலையில் இந்த குழுவினர் கேரள வெள்ள நிவாரண நிதியை தங்களுக்குள் வசூல் செய்து ரூ.40 லட்சம் திரட்டினர். இந்த தொகையைத்தான் நேற்று கேரள முதல்வரிடம் குஷ்பு, சுஹாசினி மற்றும் லிசி ஆகியோர் அளித்தனர். மேலும் கேரள வெள்ள நிவாரணத்திற்காக குஷ்பு, சுஹாசினி, லிசி ஆகியோர் ஏற்கனவே தங்களுடைய தனிப்பட்ட நிதியுதவியையும் ஏற்கனவே அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments