Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகுண்ட ஏகாதசியில் இறந்தால் சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது பற்றி?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

வைகுண்ட ஏகாதசியில் இறந்தால் சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது பற்றி?
, சனி, 5 ஜூலை 2008 (12:33 IST)
திதி என்று நாம் சொல்கிறோம் அல்லவா? இது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைத் தான் திதி என்கிறோம். அமாவாசை, பெளர்ணமி ஆகிய தேதிகளில் ஒருவிதமான ஆற்றல் வெளிப்படுவது உண்டு. அதற்கு அடுத்தபடியாக வரும் திதிகளைப் பார்த்தால் அவை சந்திரனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை நிர்ணயிக்கும் அளவுகோல்தான்.

இன்று பூமிக்கு சந்திரன் எந்த தூரத்தில் இருக்கிறான் என்பதைக் குறிப்பதுதான் இன்றைய திதி.

அதில் ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்தசி ஆகிய 4 திதிகளும் ஆன்மீகச் சக்தி வாய்ந்த திதிகளாகும். அதாவது 15 திதிகளில் 11வது, 12வது, 13வது, 14வது திதிகள்தான் இவைகள். 15வது திதி பெளர்ணமியாகவோ, அமாவாசையாகவோ இருக்கும்.

எனவே ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்தசி, பெளர்ணமி அல்லது அமாவாசை ஆகியவை ஆன்மீகப் பலம் பெற்றவை. அந்த நாட்களில் வெளிப்படும் ஆத்மா எந்த சிக்கலும் இன்றி சென்றடையும் என்று சொல்லலாம்.

பொதுவாக வயதாகியோ, நோயாலோ மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பபவர்கள் கூட ஏகாதசி அன்று நல்லபடியாக இறந்துவிடுவதைப் பார்த்திருக்கிறோம். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்தவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும்.

அதுபோல் வைகுண்ட ஏகாதசிக்கும் ஒரு தனி சக்தி உண்டு. சந்திரன் ஒரு ராசியில் இருக்கும், சூரியன் ஒரு ராசியில் இருக்கும். ஆனால் இயற்கையிலேயே இரண்டுக்கும் ஒரே குணத்தில் அன்றைய தினம் இருக்கும்.

அதாவது, அமாவாசை என்றால் சூரியனும் சந்திரனும் ஒரு புள்ளியில் சந்திக்கிறது என்று சொல்வது போல், பெளர்ணமி என்றால் இரண்டும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்கிறது அதாவது 180 டிகிரி என்று சொல்வார்கள். அதுபோலத்தான் வைகுண்ட ஏகாதசி அன்று சந்திரனும், சூரியனும் ஒரே மாதிரியான அமைப்பில் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil