முப்பதுக்கு மேல் வாழ்ந்தாரும் இல்லை, முப்பதுக்கு மேல் வீழ்ந்தாரும் இல்லை என்பது முதுமொழி.
அதாவது ஒருத்தர் தொடர்ந்து 30 வருடத்திற்கு மேல் உயரத்திலேயே இருக்க முடியாது. வியாபாரமாகவே இருந்தாலும் 30 வருடத்திற்கும் ஓடும். அதற்கு மேல் ஓடாது என்பார்கள். அதாவது சனி பகவான் ஒரு வீட்டில் இரண்டுரை ஆண்டுகள் இருப்பார். அவர் மேஷத்திலிருந்து மீனம் வரைக்கு 12 ராசிகளைக் கடப்பதற்கு 30 ஆண்டுகள் ஆகும். அவரவர்கள் ராசியைப் பொறுத்து இது வேறுபடும்.
உதாரணத்திற்கு ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதிலிருந்து அடுத்து ஏழரைச் சனி வரும் வரைக்கும் அவர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். அதனால் சனி பகவான் 12 ராசிகளையும் கடப்பதற்கு ஆகும் காலகட்டம் 30 வருடம். சனிதான் காரியன், கரியன் என்றெல்லாம் பெயர்கள் உண்டு.
காரண காரியங்களுக்கும், சில உத்தியோக, தொழில் அமைப்புகளுக்கும் உரிய கிரகம் சனிதான். அதனால் அவர் கையில்தான் எல்லாமே இருக்கிறது என்பதை சொல்வதற்காகத்தான் முப்பதுக்கு மேல் வாழ்ந்தாரும் இல்லை, வீழ்ந்தாரும் இல்லை என்று சொல்கிறார்கள்.