Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புர‌ட்டா‌சி பெருமா‌ள் மாத‌ம்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2010 (17:57 IST)
தமிழ்.வெப்துனியா.காம ்: புரட்டாசியை ஏன் பெருமாளுக்கான மாதம் என்று குறிப்பிடுகிறார்கள்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன ்: பெருமாளுடைய அம்சம் என்று சொல்லக்கூடிய கிரகம் புதன். அந்த புதனுடைய வீடு கன்னி. இந்தக் கன்னியில்தான் புதன் ஆட்சியும் அடைகிறார், உச்சமும் அடைகிறார். ஒரு கிரகம் ஒரே வீட்டில் ஆட்சியடைவதும், உச்சமடைவதும் மிகவும் அரிதான ஒரு விஷயம். அந்தப் பெருமை கன்னிக்கு உண்டு.

பெருமாளுடைய அம்சமாக கருதக்கூடிய புதனுடைய வீடு கன்னி. இந்தக் கன்னியில் சூரியன் வந்து அமர்வது புரட்டாசி மாதத்தில். ஆகவேதான் இந்த மாதத்தில் திருமாலுக்கு வேண்டிய பஜனைகள், பிரம்மோற்சவங்கள் என்று அனைத்தும் நடைபெறுகிறது.

புதனுக்கு வெகு நட்பு கிரகம் என்பது சனி பகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இதில் விசேஷ கிரகங்கள், ஆதாரணைகள் என அனைத்தும் உண்டு.

புதனுடைய வீடு கன்னி. இந்தக் கன்னியில் சூரியன் வந்து விழும் காலம் புரட்டாசி மாதம். எனவே, புதனின் அம்சமாக பெருமாள் இருப்பதால் புரட்டாசி மாதத்தை பெருமாளுக்கான மாதமாகக் குறிப்பிடுகிறார்கள்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments