Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதரச லிங்கத்தை வீட்டில் வழிபடலாமா?

பாதரச லிங்கத்தை வீட்டில் வழிபடலாமா?
, திங்கள், 5 ஜூலை 2010 (16:24 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: வட இந்தியாவில் உள்ள பல சிவாலயங்களில் சின்ன சின்னதாக பாதரச லிங்கங்களை விற்கிறார்கள். அந்த லிங்கத்தை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்வது நல்லதா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ரசவாதம் போன்றவற்றை சித்தர்கள் பிரமாண்டமாக செய்திருக்கிறார்கள். இதற்கு ரச மணி, ககன மணி என்ற பெயர்களும் உண்டு. வேறு மூலக்கூறுகளில் அதை கட்டுவார்கள். அதாவது கட்டு கட்டுவது என்று சொல்வார்கள். சில ககன மணி, ரச மணியிலேயே வீரமணி என்று வழிவகைகளெல்லாம் உண்டு. பூமியில் புதைத்து வைத்திருந்து பிறகு அதனைத் தோண்டி எடுத்து ஒரு வடிவத்திற்கு கொண்டு வருவதும் உண்டு. பாதரசத்திற்கென்று ஒரு தனி சக்தி உண்டு. பாதரசத்தோடு எதைச் சேர்த்தாலும் அதுவாக ஆகிவிடும். புதனும் அதுதான். புதன்தான் பாதரசத்திற்கு உரிய கிரகம். கிரக நிலைகொண்ட பாதரசத்தை வைத்துதான் லிங்கத்தை செய்கிறார்கள். இந்த லிங்கங்களில் முத்து போன்ற சிலவற்றையும் சேர்ப்பார்கள். எதற்காக அதைச் சேர்த்து உருவாக்குகிறோமோ, அந்தப் பணியை அது செய்து கொண்டிருக்கும். ஆயுள் விருத்திக்காக, கல்விக்காக, திருமண தோஷ நிவர்த்திக்காக இதுமாதிரியெல்லாம் செயல்படும்.

ஏவல் வேலையை வேகமாகச் செய்யக் கூடிய சக்தி பாதரசத்திற்கு உண்டு. ஏவல், பிரயோகம் என்று சொல்வோமே இதையெல்லாம் பாதரசம் துல்லியமாகச் செய்யும். இந்தப் பணியைச் செய்வதற்கு இந்தக் கட்டு, இதற்கான மூல மந்திரங்கள். இதுபோன்று சில முறைகளும் உண்டு. இதை சித்தர் புருஷர்கள் அதிகமாக செய்து கொண்டிருந்தார்கள். வனத்தில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்வது, ஜெபம், தவம் செய்வது. அப்பொழுது காடு, மலையில் இருந்து பாதரசத்தை சேகரித்து அதில் லிங்கம் செய்து பிரதிஷ்டை செய்து வந்திருக்கிறார்கள்.

பாதரச லிங்கத்தை அபிஷேகம் செய்துவிட்டு அதை அருந்துவது என்பது உடலிற்கும், நரம்புகளுக்கும் நல்லது. இது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. தற்பொழுது முறையாக அந்தக் கட்டோடு அவர்கள் செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அது முறையாக பதப்படுத்தப்பட்ட பாதரசத்தில் செய்யப்பட்ட லிங்கமா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால்தான் அது நமக்கு உகந்த சக்தியை அது கொடுக்கும். மேலும், காம இச்சைகளில் குறைபாடு இருந்தாலும் அதை அது நீக்கும். மலட்டுத் தன்மையை நீக்கும் என்று சொல்லலாம். குறிப்பிட்ட தூரம் வரை அதற்கான ஆகர்ஷன சக்தியும் உண்டு.

சில சாதாரண குடும்பங்களில், சில செட்டி நாட்டுக்காரர்கள் கழுத்தில் ருத்திராட்சத்தை போட்டிருப்பார்கள். ஐந்து முகம், ஆறு முகம் கொண்ட ருத்திராட்சத்தை கயிற்றில் கோர்த்துக் கண்டம் இருக்கும் இடத்தில் இருக்கும்படி விடுவார்கள். அதற்கென்று சில மருத்துவ குணங்கள் உண்டு. இரத்த சுத்தி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் போன்றெல்லாம் உண்டு. இதேபோல, பாதரசத்தில் இருக்கும் ரச மணி, ரச லிங்கங்கள் இதெற்கெல்லாம் தனி குணங்கள் உண்டு.

சிலரைப் பார்த்தால், அவர்களுடைய குழந்தைகளுக்கு சின்னதாக பாதரச மணியை கட்டி விட்டிருப்பார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஆந்திராவில் கூட வசிஷ்ட குலத்தை சேர்ந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் கூட பாதரசத்தில் செய்த மணி, ரச மணி என்று சொல்வார்கள். ஆனால் ஒவ்வொன்றிற்கும் அந்தக் கலவை மாறுபடும். ஏற்கனவே சொன்னது போல் ஒவ்வொரு தேவைக்கும் ஏற்ப ஒவ்வொரு மூலப்பொருள் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு செய்யப்பட்டது.

இதுபோன்று பதப்படுத்தப்பட்டு செய்யப்பட்ட லிங்கங்களை வணங்கினால் முழுமையான பலன் உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil