Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2011 (19:28 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம ்: ஏற்கனவே ஆலமரத்தின் சிறப்பு, அதனால் ஏற்படக்கூடிய நன்மை உள்ளிட்ட பல விஷயங்களைக் கூறினீர்கள். அதேபோல, தமிழர் வரலாற்றில் அத்தி மரத்திற்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அத்தி மரத்தில் செய்யப்பட்ட விஷ்ணு சிலை இன்றைக்கும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் 12 வருடத்திற்கு ஒருமுறை இழுப்பது என்பது உள்ளது. அப்படிப்பட்ட அத்தி மரத்தினுடைய சிறப்பு பற்றி சொல்லுங்கள்.

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன ்: ஜோதிடப்படி பார்த்தாலும் அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரம் அத்தி மரம். இந்த அத்தி
FILE
மரம் மிகவும் வலிமையான மரம். சுக்ரனுடைய செயல்பாடு என்பது வித்தியாசமாக இருக்கிறது. சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி. அதேபோல இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே. அதை அதிகமாகப் பார்க்க முடியாது. அதனால்தான் இதுபோன்ற பழமொழி உண்டு. அதனால்தான் சுக்ரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது.

கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம் என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே அவர்களிடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும். இனக்கமான சூழல் உருவாகும். தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும். அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய வைப்ரேஷன் என்று சொல்வோமே அது கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும். இதுபோன்ற அமைப்புகள் உண்டு.

அதனால்தான் வாழ்க்கை வளம் பெறுவதற்கும், கணவன் மனைவிக்குள் நெருக்கம், கடைசி வரையில் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு வீட்டிலுமே அத்தி மரம் இருந்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். இதுபோன்ற வைப்ரேஷன்கள் அத்தி மரத்திற்கு உண்டு.

அதன்பிறகு, அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும். இதுபோன்ற அபார சக்தியும் அத்தி மரத்திற்கு உண்டு.

அடுத்து, ஒரு இடத்தில் அத்தி மரம் இருக்கிறதென்றால் அதற்கு கீழே நீரோட்டமும் நன்றாக இருக்கிறது என்பது அறிகுறி. பூமிக்கு அடியில் நீரூற்று, நீரோடை குறைந்த அடிகளில் இருக்கும் என்ற ஐதீகமும் உண்டு. இதனை நாங்கள் பரிசோதித்தும் பார்த்திருக்கிறோம்.

அத்திப் பழத்தில் செய்த சிலவற்றை எல்லைத் தெய்வங்களுக்கு, சக்தி பீடங்கள் என்று சொல்வார்களே காஞ்சி காமாட்சி, ஆதிசங்கரர் செய்த சக்தி 108 சக்தி பீடங்களில் உள்ள அம்பாளுக்கு நெய் வேத்தியமாக அதனை பயன்படுத்துவார்கள். அத்தி பழத்தில் அடை மாதிரி தட்டி அதனை நெய் வேத்தியத்திற்குப் பயன்படுத்துவார்கள். இதுபோன்று அம்பாளுக்கு வைப்பதன் மூலம் நிறைய சக்தி கிடைக்கும் என்பது போன்றும் உண்டு.

அடுத்து, மதுரையில் கம்ப ராமாயத்ணதை அரங்கேற்றம் செய்தார்களே, அது இந்த அத்தி மரத்தில் வைத்துதான் செய்தது. சரியானதா, தகுதியானதா, தரமானதா இருந்தால் அந்த ஓலைச் சுவடி கட்டு அத்தி மரப் பலகையில் நீடிக்கும், இல்லையென்றால் மூழ்கிவிடும். இதுபோன்ற தெய்வீகச் சக்தி உடையதும் இந்த அத்தி.

இதில் அத்திப்பூ பூப்பதே தெரியாது. அதனால் அத்தி மரப் பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடம்பு நன்றாக விருத்தியாகும். ரத்த விருத்தியெல்லாம் கொடுக்கும். அத்திக்காய், அத்திக்காய் பிஞ்சு இதையெல்லாம் பொரியல் செய்து சாப்பிட்டால் எல்லா சக்தியும் கிடைக்கும். குறிப்பாக தசை இறுகும். சிலருக்கு தொங்கு தசை இருக்கும். அதெல்லாம் நீங்கி, எலும்பு வலுப்பெறும்.

அதேபோல, அத்தி மரப்பலகையில் உட்கார்ந்து சில செயல்கள் செய்தால் அந்தச் செயல் நீடிக்கும். தோஷங்கள் நீங்குவதற்கு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பார்கள். அதைவிட அத்தி இலை கொடுத்தால் மிகவும் விசேஷம். எல்லா தோஷமும் நீங்கும். அத்திப் பழத்தைச் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் முடி வலுவடைந்து வளர்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மூட்டு வலி போன்ற பிரச்சனைகளையும் நீக்கும். விட்டமின் ஏ, பி, சி, டி என்று எல்லாமே இருக்கிறது. அதனால் அத்தி மரம் என்பது அவ்வளவு விசேஷமான மரம்.

அதனால் அத்தி மரத்தை நட்டு, அதைப் பராமரித்து அதில் கிடைக்கக் கூடியதையெல்லாம் எடுத்து சாப்பிட்டு வந்தால் அது நல்லது. தவிர, தோஷ நிவர்த்தியாகவும் அது இருக்கிறது. கணவன், மனைவி பிரிந்தவர்களையும் அது சேர்க்கும். எல்லா வகையிலும் பலமானதாக இருக்கும். இதுபோன்ற அமைப்புகள் இதற்கு உண்டு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments