Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் பூங்காவில் வழிகாட்டிக‌ளை நியமிக்க திட்டம்

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2010 (12:41 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக வழிகாட்டிகளை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் கு‌றி‌ப்‌பி‌ல், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 17 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர். வன உயிரினம் மற்றும் இயற்கை குறித்த முக்கியத்துவத்தை பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு விளக்கும் வகையில் `உயிரியல் பூங்கா வழிகாட்டிகள்' திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தாவரவியல், விலங்கியல், வனவாழ் உயிரியல் மற்றும் வனவியலில் இளநிலைப் பட்டம் பெற்று இளமைத் துடிப்பும், ஆர்வமும் உள்ள நபர்கள் வழிகாட்டிகளாகப் பணிபுரிய வரவேற்கப்படுகிறார்கள்.

தேர்வு பெற்றவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையால் வழங்கப்படும். பயிற்சிகள் முடிந்து வெற்றி பெற்றவர்கள், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உயிரியல் பூங்கா வழிகாட்டிகளாகப் பணியாற்ற அங்கீகார அட்டைகள் வழங்கப்படும். பூங்காவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள், அவர் களத ு சேவையை பயன்படுத்திக் கொள்வார்கள்.

இவ்வழிகாட்டிகள், விலங்குகள் பற்றியும், அவற்றின் சிறப்பு இயல்புகள் பற்றியும் சுவாரசியமாக பயணிகளுக்கு எடுத்துக் கூறுவார்கள். அவர்கள் வழிகாட்டிகளாக பணிபுரிய ஆர்வமுள்ள நபர்கள் தங்கள் சுய விவரங்களுடன் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குனர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர், சென்னை-48 என்ற முகவரிக்கு 15.11.2010-க்குள் விண்ணப்பிக்கலாம் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments