Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல்‌லி‌ல் தடை ‌நீ‌க்க‌ம்

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2010 (12:15 IST)
த‌மிழக‌ம் - க‌ர்நாடக‌த்‌தி‌ன் எ‌ல்லை‌ப் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ஒகேன‌க்க‌ல் அரு‌வி‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட வெ‌ள்ள‌ப்பெரு‌க்‌கி‌ன் காரணமாக அரு‌வி‌யி‌ல் ‌கு‌ளி‌க்க ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட தடை ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

க‌ர்நாடக மா‌நில‌ம் கா‌வி‌ரி ‌நீ‌ர்‌ப்‌பிடி‌ப்பு பகு‌தி‌‌க‌ளி‌ல் பெ‌ய்த கனமழையா‌ல் ‌கிருஷ‌்ணராஜ சாக‌ர் அணை ‌நிர‌ம்‌பி உப‌ரி ‌நீ‌ர் கா‌வி‌ரி‌யி‌‌ல் ‌திற‌ந்து‌விட‌ப்ப‌ட்டது. இதனா‌ல் வெ‌ள்‌ளி‌, ச‌னி‌க்‌கிழமைக‌ளி‌ல் ஒகேன‌க்க‌ல் கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ல் வெ‌ள்ள‌ப்பெரு‌க்கு ஏ‌ற்ப‌ட்டது.

அரு‌வி‌க‌ளி‌ல் வெ‌‌ள்ள ‌நீ‌ர் கொ‌ட்டியதா‌ல், ஒகேன‌க்க‌ல் அரு‌விக‌ளி‌ல் பய‌ணிக‌ள் கு‌ளி‌க்கவு‌ம், ப‌ரிச‌ல் சவா‌ரி செ‌ய்யவு‌ம் மாவ‌ட்ட ‌நி‌ர்வாக‌ம் தடை ‌வி‌தி‌‌த்தது.

இ‌ந்‌நிலை‌‌யி‌ல் நே‌ற்று காலை ஒகேன‌க்க‌ல்லு‌க்கு வரு‌ம் ‌நீ‌ரி‌ன் அளவு குறை‌ந்ததா‌ல் அரு‌வி‌யி‌ல் ‌நீ‌ர் கொ‌ட்டுவது இய‌ல்பாக இரு‌ந்தது. இதனா‌ல் வெ‌ள்ள அபாய‌ம் ‌நீ‌ங்‌கியது. ‌இத‌ன் ‌பிறகு ஒகேன‌க்க‌‌ல் அரு‌வி‌யி‌ல் கு‌ளி‌க்க ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட தடை ‌நீ‌க்க‌ப்ப‌ட்டது. ‌விடுமுறை ‌தினமான நே‌ற்று ஒகேன‌க்க‌ல்லு‌க்கு வ‌ந்‌திரு‌ந்த ஏராளமான சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் இதனா‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்து, அரு‌வி‌யி‌ல் கு‌ளி‌த்து ம‌கி‌ழ்‌ந்தன‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணத்தை வெறுக்கும் பிரபாஸ்! அதுக்கு காரணம் இதுதான்..? - மனம் திறந்த தாயார்!

நீண்ட கால நண்பனை கரம்பிடித்த சாக்‌ஷி அகர்வால்! கோவாவில் நடந்த திருமணம்! - வைரல் போட்டோஸ்!

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

Show comments