Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் தலைசிறந்த பண்பாடு, சுற்றுலா பட்டியலில் முதலிடத்தில் ஆக்ரா

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2011 (20:05 IST)
உலகின் முதன்மையான 50 பண்பாடு, சுற்றுலாத் தலங்கள் பட்டியலில், பேரரசர் ஷாஜஹான் கட்டிய தாஜ் மஹால் உள்ள ஆக்ரா நகரமே முதலிடத்தில் உள்ளது.

லண்டனில் இருந்து வெளிவரும் தி சண்டே டெலகிராஃப், பேஜ் அண்ட் மே எனும் சுற்றுலா தேர்வு நிறுவனமும் உலகின் முதன்மையான 50 பண்பாடு, சுற்றுலா நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் இந்தியாவில் இருந்து 3 இடங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா நகரங்களாக இடம்பெற்றுள்ளன.

அதில் தாஜ் மஹால் கட்டப்பட்டுள்ள ஆக்ரா நகரம் உலகின் முதலிடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் நகரமும், உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவும் மற்ற இரண்டு இடங்களாகும். ஆக்ராவில் தாஜ் மஹால் மட்டுமின்றி, அங்குள்ள செங்கோட்டையும், ஃபேதப்பூர் சிக்ரியும் முக்கிய இடங்களாக கூறப்பட்டுள்ளது.

இதிமத் உத் தவ்லா, பிருந்தாவனம், பரத்பூர் பறவைகள் சரணாலயம் ஆகியனவும் முக்கிய இடங்களாக அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஆக்ரா முதலிடத்திலும், ஜெய்பூர் 27வது இடத்திலும், லக்னோ 32வது இடத்திலும் உள்ளன.

உலகின் மற்ற முக்கிய பண்பாட்டு. சுற்றுலாத் தலங்களாக இடம் பெற்றுள்ளவ ை: ஆம்ஸ்டர்டாம், அங்கூர், வாட், ஏதன்ஸ், பாங்காக், பார்சிலோனா, பீஜிங், புகாரா, கைரோ, இஸ்தான்புல், ஜெரூசலம், கியோட்டோ, சிட்னி, டெஹ்ரான், வியன்னா, வார்ஷா ஆகியன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

Show comments